அஜித் தோவல் கதை
காஷ்மீர் விவகாரமாக இருக்கட்டும். கொரோனா காலத்தில்
தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டு டெல்லியில் இருந்தவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்ததாக இருக்கட்டும், இப்படி தேச பாதுகாப்பு சார்ந்த விசயங்களை சுமுகமாக தீர்ப்பதில் சொல்லப்படும் பெயர் அஜித் தோவல்.
2014ல் மோடி பிரதமராக பதவியேற்றதும் உடனடியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் என்பவர் நியமிக்கப்படுகிறார்.. அப்துல் கலாம் போன்றவர்கள் வகித்த பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இவரை மோடி தேடிப்பிடித்து நியமிக்க காரணம் என்ன.
1948ல் ராணுவ வீரரின் மகனாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்த அஜித் தோவல். 1968 கேரள கேடரில் ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். எல்லோரையும் போல நாட்டுக்குள் இருக்கும் சமூக விரோதிகளை அழிக்கும் போலீஸ் போல் அல்லாமல், நாட்டையே அதிர வைக்கும் தீவிரவாதிகளை வேரறுக்கும் உளவாளியாக மாறினார். சாதாரண உளவாளியாக அல்ல... ஜேம்ஸ் பாண்ட் ரக உளவாளியாக உருவெடுத்தார்.
1988ல் ப்ளூ ஸ்டார் மாதிரியான நடவடிக்கையின் மூலம் காலிஸ்தான் தீவிரவாதிகளை காணாமல் போகச் செய்ததில் அஜித் தோவலின் பங்கு முக்கியமானது.
1999 ஆம் ஆண்டு டிசம்பர் 24 தேதி நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து புதுடெல்லி நோக்கி விமானம் வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தினுள்ளே பயணிகள் போல் அமர்ந்து இருந்த, ஹர்கத் உல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த 5 தீவிரவாதிகள் எழுந்து விமானி மற்றும் பயணிகளிடம் விமானத்தை கடத்தி விட்டதாக கூறினர். பின்னர் விமானத்தை பாகிஸ்தானின் லாகூரில் தரையிறங்குமாறு கட்டளையிட்டனர். ஆனால் விமானியோ எரிபொருள் கம்மியாக உள்ளதாக கூறி பஞ்சாப்பின் அமிர்தசரஸ் தரையிறக்கினார். எரிபொருள் நிரப்ப கொஞ்ச கால தாமதம் ஆனது. உடனடியாக விமானத்தை அங்கிருந்து கிளப்பி பாகிஸ்தானின் லாகூரில் தரையிறக்கினர். ஆனால் பாகிஸ்தானோ விமானத்திற்கு எரிபொருள் நிரப்பி பயணிகளுக்கு உணவு பொட்டலம் கொடுத்ததோடு ஒதுங்கிக் கொண்டது. பின்னர் தீவிரவாதிகள் அங்கிருந்து விமானத்தை துபாய் கொண்டு சென்றனர். அந்நாட்டு அரசும் ஒத்துழைக்க மறுத்தது. இறுதியாக தலிபான்கள் ஆட்சியிலிருந்த ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் தரை இறங்கினர். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பயணிகளை விடுவிக்க வேண்டுமானால் இந்தியா 20 கோடி டாலர் பணத்தையும் 36 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள். இந்த நிபந்தனையை ஏற்க மறுத்த இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தை குழுவில் இருந்த 3 பேரில் ஒருவர் அஜித் தோவல். அவர்களின் மனம் அறிந்து லாவகமாக பேசி மூளைச்சலவை செய்யும் தீவிரவாதிகளை மூளைச்சலவை செய்து, இறுதியாக
சிறையில் இருந்த மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை விடுதலை செய்ய இந்தியா சம்மதித்தது. பதிலாக, எல்லாப் பயணிகளையும், ஏர்லைன்ஸ் ஊழியர்களையும் விடுவிக்கத் தீவிரவாதிகள் சம்மதித்தார்கள்.
பின்பு அன்றைய
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் அஜித் நோவல் ஆகியோர் மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழைத்துக்கொண்டு, தனி விமானத்தில் காந்தஹார் சென்றார்கள். பரிமாற்றம் நடந்தது. பயணிகள் அமைச்சரின் விமானத்தில் ஏறினார்கள். ஒரு வாரத்துக்குப் பின், பிறந்த மண் நோக்கி, நிம்மதியாகப் வந்து சேர்ந்தனர். கந்தகார் விமான கடத்தலில் அப்போதைய வாஜ்பாய் அரசு தீவிரவாதிகளை விடுவித்தது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பயணிகளை பத்திரமாக மீட்டு கொண்டு வந்ததில் அஜித் தோவலின் பங்கு பாராட்டுக்குரியது.
அதற்கு அடுத்த ஏழு வருடங்கள் இவரை காணவில்லை. எங்கே சென்றிருப்பார் என்று எல்லோரும் யோசனையில் ஆழ்ந்து இருக்க, இவரோ பாகிஸ்தானில் ரா உளவாளியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செயல்பாடுகளையும், தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் இடங்கள் மற்றும் அவர்களின் மறைவிடங்கள் குறித்தும் ஏராளமான தகவல்களை இந்திய உளவுத் துறைக்கு அனுப்பி வைத்தார். இவரின் இந்த அனுபவம்தான் பின்னாளில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சியளிக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிந்து surgical strike நடத்த உதவியது.
இப்படி இந்திய உறவு பிரிவுகளில் அபார சாதனைகளை நடத்தி பின்பு இந்திய உள்நாட்டு உளவு நிறுவனமான ஐபி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த அஜித் தோவலை
2014 பிரதமராக மோடி பதவி ஏற்றதும் பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தார்.
2014ல் தூத்துக்குடி நர்ஸ் மோனிகா உட்பட 46 இந்திய நர்சுகள் ஈராக்கின்
tikrit நகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கினார்கள். எந்தவொரு ஈவு இரக்கமற்ற ஐஎஸ்ஐஎஸிடம் இருந்து இவர்களை எப்படி மீட்பது என்று இந்திய வெளியுறவுத் துறையும் பிரதமர் மோடியும் ஆழ்ந்த யோசனையில் இருந்தனர். அவர்களுக்கு நம்பிக்கைத் தரும் ஒருவராக இருந்த அஜித் தோவல் பிரதமர் மோடியிடம் தானே ஈராக்கிற்கு நேரடியாக சென்று களநிலவரம் என்னவென்பதை ஆராய்ந்து மீட்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தார். உடனடியாக மோடியும் சரி சொல்ல ஜூன் மாதம் 25ஆம் தேதி ஈராக்கின் தகதகக்கும் பாக்தாத் நகரில் காலைப்பொழுதில் காலடி எடுத்து வைக்கிறார்.
அதேநாளில் இந்திய உளவுத்துறையின் இயக்குநர் ஆசிப் இப்ராஹிம், சவுதி தலைநகர் ரியாத்துக்கு சென்று இறங்குகிறார். அவருகளுக்கு இடையே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாலமாக இருந்து முழுவீச்சில் வேளையில் இறங்கினர். களத்தில் இறங்கிய சில நாட்களிலேயே
அனைவரையும் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தார்கள்.
2017 டோக்லாம் பகுதியில் இந்திய சீன ராணுவம் நேருக்கு நேராக 70 நாட்களுக்கு மேலாக முட்டிக்கொண்டு நிற்கின்றது. இப்பொழுது முட்டிக் கொண்டிருக்கும், சீன- இந்திய ராணுவம் என்பது 1962ம் ஆண்டு போரில் பங்கேற்ற ராணுவம் அல்ல. பல தொழில்நுட்ப அணு ஆயுதங்களைக் கொண்ட அசுரப் பலம் பொருந்திய ராணுவங்கள். உலகமே இந்த நிகழ்வை கூர்ந்து கவனித்து கொண்டு இருந்தது.
அப்போது சீனாவில் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாடு நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள சென்ற அஜித் தோவல் சீனப் பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜீச்சியுடன் டோக்லாம் பிரச்சனையை பற்றி பேசி
அதை சுமூகமாக தீர்த்து வைத்து இரு படைகளும் வாபஸ் வாங்கின. இந்த நிகழ்வை உலகமே மூக்கு மேல் கை வைத்து பார்த்தது.
வடக்கு பகுதிகளில் மட்டும் அல்ல தெற்கே உள்ள இலங்கையின் அதிபர் ராஜபக்சே சீனாவுக்கு வேண்டப்பட்டவராகவே இருந்தார். மேலும் அவர் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழப்போரில் இலங்கை அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனையும் அஜித் தோவலிடம் மோடி கவனிக்க சொல்லுகிறார். இதனையடுத்து ரா உதவியுடன் ராஜபக்சே-வை வீழ்த்தி மைத்ரிபால சிறிசேனாவை அதிபராக கொண்டு வந்தார் அஜித் தோவல்.
2017 ஆம் ஆண்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவிற்கு வந்தார். அப்போது
இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கு இடையேயான எல்லை பிரச்சனையை சுமூகமாக பேசி மோடி அரசு தீர்த்தது. இதில் பிண்ணனியில் இருந்து செயல்பட்டதில் அஜித் தோவலின் பங்கு அளப்பரியாது.
20 வருடமாக வங்கதேச சிறையில் தண்டனை முடிந்தும் அங்கேயே பலத்த பாதுகாப்புடன் டெரா போட்டுயிருந்த உல்பா தீவிரவாத குழுவின் பொதுச் செயலாளர் அனுப் சேத்தியாவை அலேக்காக இந்தியா தூக்கி வந்தது.
2016 மணிப்பூரில் நம்முடைய ராணுவ வீரர்கள் 18 பேர் நாகா தேசிய சோஷலிச லிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தனர். இதற்கு பழிதீர்க்க இந்திய ராணுவம் மியான்மர் எல்லைக்குள் சென்று 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அழித்து ஒழித்தது,
நாகா சோஷாலிஸ்ட் தீவிரவாத குழுவை இரண்டாக உடைத்து ஐசக் முய்வா என்ற குழுவை மோடியிடம் சரணடைய வைத்ததும் எல்லாம் அஜித் தோவலின் கைங்கேரியமே ஆகும்.
இரண்டாவது முறையாக பிரதமரான மோடி அரசு காஷ்மீர் 370வது சட்டப்பிரிவை நீக்கும் விவகாரத்தை கையில் எடுத்து வெற்றிகரமாக நடத்தியதற்கு முக்கிய பங்கு தோவலுக்கு உண்டு.
அதேபோல் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் தெரிய தொடங்கிய போது டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடு ஏராளமானோர் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஆனது. டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாஅத்தினர் பரிசோதனைக்கு வர மறுக்கின்றனர். உடனடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அஜித் தோவலை இந்த விசயத்தை கவனிக்க கூறுகிறார். உடனடியாக களத்தில் இறங்கிய அஜித் தோவல், ஜமாஅத் இயக்குனர் மௌலானா ஆசாத் கல்வியிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்ய ஒப்புக்கொள்ள வைத்ததுடன், அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கவும் சம்மதிக்க வைத்தார்.
இப்படி
எல்லை பிரச்சினை முதல் உள்நாட்டில் உள்ள கொரோனா பிரச்சினைகளை வரை சுமுகமாக முடித்து வைப்பதில் வல்லவராக உள்ள அஜித் தோவல் நிஜ 007 ஹீரோவாகவே வலம் வருகிறார்.
Comments
Post a Comment