மணிரத்னம் கதை

 புராணம் + அரசியல் + சினிமா = மணிரத்னம்

புராணம், வரலாற்றில் உள்ள நிகழ்வுகளை தற்காலத்திற்கு மாற்றி, அதில் கொஞ்சம் சண்டை, கொஞ்சம் காதல், middle class வாழ்க்கைமுறை.. இவற்றைக் கொண்டு ஒரு கதைக் களம் அமையுமானால். அது மணிரத்னத்தின் கதையாகதான் இருக்கும். 


தமிழக சினிமா உலகில் இருந்து சென்று, இந்திய சினிமா உலகை ஆளும், தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர்  மணிரத்னம். 


புராண கால நிகழ்வுகளை  அப்படியே  தற்காலத்திற்கு மாற்றி, தற்போது உள்ள  அரசியலை அதனுடாக பேச வைப்பதில் வல்லவர். அப்படி எடுக்கப்பட்ட படங்களில் ஒன்று ரோஜா.  


ரோஜா திரைப்படத்தையும், சத்யவான் சாவித்திரி என்ற புராண கதையையும் தற்போது பார்ப்போம்... 


சத்யவான் சாவித்திரி கதையானது... 


மத்திர நாட்டு மன்னன் அஸ்வபதியின் பெண்  சாவித்திரி... 


சாவித்திரி பருவ வயது வந்தவுடன் கணவனைத் தேடிக் கொள்ளும் உரிமையை, அவரது தந்தை  அளிப்பார். இதனையடுத்து, அவர் பல்வேறு நாட்டுக்குச் சென்று பல்வேறு இளவரசர்களை பார்ப்பார்.. ஆனாலும் யார் மீதும் அவருக்கு ஈர்ப்பு உண்டாகாது. சால்வ நாட்டு மன்னன்

துயுமத்சேனன், பகைவர்களிடம் போரில் தோல்வியுற்று காட்டில் தன் மனைவி, மற்றும் மகன் சத்யவானோடு வாழ்ந்து வந்தார்.  சத்யவான், பேரழகு கொண்ட ஆண்மகன். 


சத்யவானை பார்த்தவுடன், அவரை மணமுடிக்க வேண்டும் என்று, தனது தந்தையிடம் சாவித்திரி கூறுவார். அதுசமயம் அங்கு வரும் நாரதர் "இன்றில் இருந்து 12 மாதங்களில் சத்யவான் இறக்கப் போகிறான்" என்று கூறுகிறார். இதை கேட்ட சாவித்திரியின் தந்தை அஸ்வினி, பதறிப்போகிறார்.. ஆனால், சாவித்திரியோ எவ்வித பதற்றமும் இன்றி, தனக்கு ஏற்ற மணாளன் சத்யவான் மட்டுமே என்று கூறி, அவரையே திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருக்கிறார். 


இதனையடுத்து, நாரதர்

"நான் சில நோன்பு முறைகளை உனக்கு உபதேசிக்கிறேன். நீ அதை பக்திபூர்வமாகக் கடைப்பிடித்தால், அம்பாள் மனம் மகிழ்ந்து உனக்கு நிகழ இருக்கும் தீமைகளில் இருந்து உன்னை காப்பாள்" என்று கூறி அந்த நோன்பு முறையை உபதேசிக்கிறார். இந்த நோன்பிற்கு பெயர் காரடையான் நோன்பு. இந்த நோன்பை, தற்காலத்திலும் கணவரின் ஆயுள் அதிகரிக்க வேண்டி, மனைவிமார்கள் கடைபிடிக்கிறார்கள். மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி மாதம் முதல் நாள் காலை நோன்பை முடிப்பார்கள். 


சரி நாம் கதைக்கு போவோம். 


இருவருக்கும் திருமணம் நடைபெற்று, சத்யவானுடன் காட்டிற்குச் சென்று சாவித்திரி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாள். சத்யவான்  இறக்கும் நாள்  சாவித்திரிக்குத் தெரிந்து இருந்தபோதும், அந்த ரகசியத்தை சாவித்திரி, அவனிடம் சொல்லவில்லை.

சத்யவான் இறப்பதற்கு 3 நாட்களே இருந்த சமயத்தில், அந்த மூன்று நாட்களும் உணவும், உறக்கமும் இன்றி காரடையான் நோன்பை கடுமையாக மேற்கொண்டாள் சாவித்திரி. கடைசி நாளும் வந்தது. இறுதி  நாள் என்பதால், கணவன் சத்யவானுடன்  விறகு வெட்டச் 

சாவித்திரியும் சென்றாள் .

காட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில் சத்யவான், சாவித்திரியின் மடி மீது தலை வைத்து உயிர் துறந்தான். 


அப்போது யார் கண்ணுக்கும் தெரியாத யமன், பதிவிரதையான சாவித்திரியின் கண்ணுக்கு மட்டும் தெரிந்தான். இதனையடுத்து, சத்யவான் உடலை பத்திரப்படுத்தி விட்டு, யமனையே பின்தொடர்ந்து சென்றாள் சாவித்திரி...

  

தன்னை ஒரு பெண் பின்தொடர்ந்தது வருவதை கண்ட யமன் அதிர்ச்சி அடைந்து, "பெண்ணே நீ என்னை பின்தொடர்ந்தது வர கூடாது. கற்புக்கரசியான உனக்கு இப்போதே, வேண்டிய வரத்தை அளிக்கிறேன் கேள் என்று யமன் கூறினார்.. சாவித்திரியோ 100 குழந்தைகளைப் பெற வேண்டும் என்று வரம் கேட்டாள்... சற்றும் யோசிக்காத யமன் வரத்தை அளித்தார். இதனையடுத்து மீண்டும் யமனை பின்தொடர்ந்தே சாவித்திரி சென்றாள்... மீண்டும் சாவித்திரியை பார்த்து ஏன்? என்னை மீண்டும் பின் தொடர்கிறாராய், மேலும், ஒரு வரம் தருவதாக கூறி, வரத்தை கேள் என்றார் எமன். குழந்தைகள் பெற என் கணவர் எனக்கு வேண்டும் என்றார்... யமனுக்கு தான் அளித்த வரத்தில் தானே சிக்கிக்கொண்டது அப்போதுதான் புரிந்தது.  இதனையடுத்து, சத்தியவானை உயிர்ப்பித்து யமன் கொடுத்தார்.. 


இதுதான் சத்யவான் சாவித்திரியின் கதை... 


அப்படியே, ரோஜா திரைப்படத்தின் கதையை பார்ப்போம்.... 


கதாநாயகன், பெண் பார்க்க கிராமத்திற்கு வரும் காட்சியில் இருந்து படம் தொடங்குகிறது... பார்க்க வந்த பெண்ணோ தனக்கு காதலன் இருப்பதாக கூற... உடனே கதாநாயகன் அப்பெண்ணின் தங்கச்சியை அதாவது, கதாநாயகியை பெண் கேட்கிறார். இதனையடுத்து, கதாநாயகன் ரிஷிக்கும், கதாநாயகி ரோஜாவுக்கும் திருமணம் ஆகி இருவரும் சென்னைக்கு செல்கிறார்கள். 


திடீரென ரிஷி ராணுவ புலனாய்வுகளை பாதுகாக்க, காஷ்மீரின் பாரமுல்லாவில் உள்ள ஒரு ராணுவ தகவல் தொடர்பு மையத்திற்கு செல்ல வேண்டியதாகிறது. புது பொண்டாட்டியையும் கூட்டிக்கொண்டு காஷ்மீருக்கு செல்கிறார் ரிஷி.  


அங்கு, ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தீவிரவாதிகள் தலைவன் வாசிம் கானை விடுவிக்க, சில தீவிரவாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

அவர்களிடம் ரிஷி சிக்கிகொள்கிறார்.... இது துள்ளலான கிராமத்து பெண்ணான ரோஜாவின் வாழ்வில் பெரும் சவாலாகிறது.

தனது கணவரை மீட்பதற்காக ரோஜா, காவல்துறையிடம் ஓடுகிறார், அரசியல்வாதிகள் மற்றும் ராணுவத்திடம் உதவி கோருகிறார். முதலில் அவளின் குரலும் யாரும் சேவி சாய்ப்பதாக தெரியவில்லை.... இருப்பினும், ரோஜா  தொடர்ந்து போராடி, ரிஷிக்காக தீவிரவாதி வாசிம் கானை விடுக்க  அரசை சம்மதிக்க வைக்கிறாள்.. 

இதுதான் ரோஜா திரைப்படத்தின் கதை. 

இந்த ரோஜா திரைப்பட வெளிவந்தது 1992. அதற்கு  2 ஆண்டுக்கு முன்பு மற்றோரு முக்கிய நிகழ்வு நடந்து இருந்தது.  1989ஆம் ஆண்டு அன்றைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த mufti mohammad sayeed மகள்

Rubaiya Sayeed, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். பின்னர் தீவிரவாதிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்றியதை அடுத்து, Rubaiya விடுவிக்கப்பட்டார். 

புராண கதையின் கரு, கணவரின் உயிரை மனைவி போராடி காப்பாற்றுவது தான்.... இந்த கருவை, அப்போது நிகழ்ந்த காஷ்மீரின் நிகழ்வோடு கலந்து, அழகாக படைத்திருப்பார் இயக்குனர் மணிரத்னம்.

Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு