மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

 தமிழகத்தில் திரைத்துறை மூலம் கிடைத்த புகழால் ஆட்சிக்கு வந்த பெண்  ஜெயலலிதா. ஆனால் திரைப்படமே பார்க்க மாட்டேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஒரு பெண் உள்ளார். அந்த பெண்  Mayawati.

மாயாவதியையும் பகுஜன் சமாஜ் கட்சியையும் பிரித்து பார்க்க முடியாது. 


பஞ்சாப் மாநிலம் Rupnagar மாவட்டம் Khawaspur என்ற கிராமத்தில் 1934ஆம் ஆண்டு பிறந்தவர் Kanshi Ram. சாதிய பகுபாடுகளுக்கு எதிராக போராடிய Kanshi Ram, backward and minority communities employees federation என்ற அமைப்பை 1978 ஆம் ஆண்டு ஏற்படுத்தி இட ஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தொடர்ந்து செயல்பட்டார். 


தேர்தல் அரசியலில் இருந்து  ஈடுபடாமல், சமூக தளங்களில் செயல்பட்டுவந்த Kanshi Ram 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 பகுஜன் சமாஜ் என்ற கட்சியை தொடங்கி தேர்தல் களத்திற்கு வந்தார். இக்கட்சியின் தேர்தல் சின்னம் யானை. 

பகுஜன் என்றால் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மதச் சிறுபான்மையினர்  உள்ளிட்டோர்களை குறிக்கும் என்று  கூறினார் Kanshi Ram. தொடர் போராட்டம் மற்றும் செயல்பாடுகளால்

வட இந்தியா முழுவதும் பட்டியல் இன மக்களை ஒருங்கிணைத்து மாபெரும் தலைவராக உருவெடுத்தார் Kanshi Ram. 


ஒரு முறை Kanshi Ram

டெல்லி உள்ள பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய அப்பள்ளியின் ஆசிரியையின் பேச்சு அவரை கவர்ந்தது. அந்த ஆசிரியை தான் Mayawati Naina Kumari என்கிற மாயாவதி. 


கூட்டம் முடிந்து  மாயாவதியை கூப்பிட Kanshi Ram," உன் எதிர்காலம் திட்டம் என்னவென்று கேட்டார்." அதற்கு மாயாவதி," ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும்" என்று கூறினார். அதற்கு Kanshi Ram" நீ என்னுடன் அரசியலுக்கு வந்தால்,  ஐஏஎஸ் அதிகாரிகளை ஆட்டி படைக்கும் அதிகாரத்தை பெற்று தருவேன்" என்று கூறினார். இதனை தொடர்ந்து

பகுஜன்சமாஜ் கட்சியில் இணைந்தார் மாயாவதி.

1956 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த மாயாவதி,  சட்டம் படித்தவர். திருமணம் செய்து கொள்ளவில்லை. 1989ஆம் ஆண்டு

முதல்முறையாக மக்களவைத் தேர்தலில்

Bijnor தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மாயாவதி. 


1993ஆம் நடந்த உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது பகுஜன் சமாஜ். இந்த தேர்தலில் 162 இடங்களில் போட்டியிட்டு 66 இடங்களில் வெற்றி பெற்றது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முலாயம் சிங் தலைமையில் ஆட்சி அமைந்தது. 1995ஆம் ஆண்டு பாஜக-வுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்ட பகுஜன் சமாஜ், முலாயம் சிங் ஆட்சிக்கு  அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. தொடர்ந்து பாஜக ஆதரவுடன் பகுஜன் சமாஜ் ஆட்சி அமைத்தது. மாயாவதியை முதலமைச்சராக்கினார் Kanshi Ram. அப்போது மாயாவதிக்கு வயது 39. இந்த ஆட்சி 4 மாதங்களே நீடித்தது. 


2001ல் மாயாவதி தான், தன் அரசியல் வாரிசு என்று Kanshi Ram

அறிவித்தார். 2002ஆம் ஆண்டு நடைபெற்ற உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறி நீடித்தது.

பாஜக ஆதரவுடன் 3வது முறையாக முதலமைச்சரானார் மாயாவதி. இந்த ஆட்சி ஒன்றை ஆண்டுகாலம் நீடித்தது. பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 35 எம்எல்ஏக்கள் அந்த கட்சியில் இருந்து விலகி முலாயம் சிங் கட்சியில் சேர்ந்தனர்.  மாயாவதி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. இப்படி பகுஜன் சமாஜ் கட்சி பலமுறை பிளவு பட்டபோதும் மனம் தளராமல் கட்சியை கட்டி காப்பாற்றினார் மாயாவதி ‌. 1997ல் மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் 11 பேர் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து கட்சியை நாடு முழுவதும் மாயாவதி விரிவுபடுத்த பணி தீவிரமாக இறங்கினார். 


உடல்நலம் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த Kanshi Ram, 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் நாள் உயிரிழந்தார். 


2007ல் உத்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த முறை யார் தயவு இல்லாமல் ஆட்சியை பிடிக்க வியூகங்களை மாயாவதி வகுத்தார். உயர்சாதியில் உள்ள பிராமணர் உள்ளிட்ட சிலருக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இதை அரசியல் வல்லுனர்கள் social engineering என்று கூறினார்கள். 


தேர்தல் பிரச்சாரங்களில் பேசிய மாயாவதி," நாங்கள் உயர் சாதியினருக்கு எதிரானவர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் உத்திர பிரதேசத்தில் மூன்று முறை நான் முதலமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் உயர் சாதியினருக்கு எனது அமைச்சரவையில் இடம் அளித்தேன். பட்டியல் இனத்தவர்களுக்கும், உயர் சாதியினருக்கும் இடையே உள்ள வெறுப்புணர்வை மறைய தான் பாடுபட்டு வருகிறேன்" என்று கூறி அதிரடி பிரச்சாரங்களை செய்தார். அரசியலில் ஈடுபாட்ட ஆரம்ப காலத்தில் உயர் சாதியினரை கடுமையாக தாக்கி பேசிய மாயாவதி, அந்த ஸ்டென்டை மாற்றி பிரசாரத்தில் ஈடுபட்டதன் விளைவாக, 206 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தார். 


இந்த ஆட்சிகாலத்தில் சர்ச்சைக்குரிய வகையில் அரசு பணத்தில் தனது கட்சி சின்னமான யானை மற்றும் தனது சிலையை மாநிலம் முழுவதும் அமைத்தார்... 


2012ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 224 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பகுஜன் சமாஜ் கட்சி 80 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சியானது. 


தொடர்ந்து 2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலை காரணமாக 80 தொகுதிகள் கொண்ட உத்திரப் பிரதேசத்தில்

73  தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

அதேபோல் 2017ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது .. இது பகுஜன் சமாஜ் கட்சி வரலாற்றில் மிகப்பெரிய சறுக்கல் ஆகும்...

இதனையடுத்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்த மாயாவதி, பழைய பகையை மறந்து சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்தார். 

  இந்த மெகா கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தில் கூட பிளவை காட்டக்கூடாது என்பதற்காக எதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங், மாயாவதி இணைந்து பிரசார மேடைகளில் தோன்றினர். ஆனால்  இந்த மெகா கூட்டணி உத்தரபிரதேசத்தில் தோல்வியையே தழுவியது. 


இப்படி, தொடர் சரிவில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சிக்கு வரும் 2022 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் வாழ்வா? சாவா? பிரச்சனை..








Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

தமிழகத்தில் சாராய வரலாறு