வாரிசு முதல்வர்கள்
தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின், மே 7ஆம் தேதி பொறுப்பேற்றார். இவரே தமிழகத்தில் முதல் முறையாக, முதலமைச்சரின் மகனாக இருந்து முதலமைச்சர் ஆனவர். இவரின் தந்தை கருணாநிதி 1969 முதல் 1971, 1971 முதல் 1976, 1989 முதல் 1991, 1996 முதல் 2001, 2006 முதல் 2011 என 5 முறை தமிழக முதலமைச்சராக இருந்துள்ளார்.
இதேபோல் பல மாநிலங்களில், முதலமைச்சரின் மகன்கள், முதலமைச்சராகி உள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்.
1974 முதல் 1982 வரை
காஷ்மீர் முதலமைச்சராக இருந்தவர்
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி நிறுவனர்
Sheikh Mohammed Abdullah.
அவர் உயிரிழந்த பிறகு, அவரின் மகன் Farooq Abdullah, 3 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். இவரது மகன் Omar Abdullah 2009 முதல் 2015 வரை ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக இருந்தார். இதேபோல்
ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி நிறுவனர்
Mufti Mohammad Sayeed 2002 முதல் 2005 மற்றும், 2015 முதல் 2016 வரை என 2 முறை முதலமைச்சராக இருந்துள்ளார்.
Mufti Mohammad Sayeed 2016ல் உயிரிழந்ததை அடுத்து, அவரது மகள் Mehbooba Mufti, முதலமைச்சராக பதவியேற்றார்.
2004 முதல் 2009 வரை காங்கிரஸ் சார்பில்,
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக இருந்தவர்
ராஜசேகர ரெட்டி. இவர் 2009 ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, அவரது
மகன் ஜெகன் மோகன் ரெட்டி, முதலமைச்சர் பதவியை எதிர் பார்த்தார். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டியை ஓரங்கட்டிய காங்கிரஸ், அவர் மீது பல்வேறு வழக்குகளையும் போட்டது. இதனையடுத்து YSR காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்த ஜெகன், ஆந்திரா சட்டமன்றத்திற்கு 2019ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.
உத்தரப் பிரதேச முதலமைச்சராக 3 முறை இருந்தவர்
சமாஜ்வாதி கட்சி நிறுவனர் Mulayam Singh Yadav. இவரின் மகன்
Akhilesh Yadav 2012 முதல் 2017 வரை உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்துள்ளார். 2016ல்
Akhilesh Yadavவை
கட்சியை விட்டு நீக்கியதாக Mulayam Singh அறிவித்தார். ஆனால் மாநாடு ஒன்றை நடத்தி, கட்சியின் தலைவர் பொறுப்பை, தான் எடுத்துக் கொண்டதாக அறிவித்த Akhilesh, இனி கட்சி ஆலோசகராக மட்டுமே Mulayam இருப்பார் என்றும் தெரிவித்தார்.
1996 முதல் 1997 வரை
பிரதமராகவும், 1994 முதல் 1996 வரை கர்நாடக மாநில முதலமைச்சராகவும் இருந்தவர் Deve Gowda. இவரது மகன்
Kumaraswamy 2006 முதல் 2007, மற்றும் 2018 முதல் 2019 வரை என 2 முறை முதலமைச்சராக இருந்துள்ளார்.
தொடர்ந்து
5வது முறையாக
ஒடிசா முதலமைச்சராக இருந்து சாதித்து வருபவர்
பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக். இவரின் தந்தை பிஜு பட்நாயக் 1961 முதல் 1963 மற்றும் 1990 முதல் 1995 வரை என 2 முறை முதலமைச்சராக இருந்துள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக 2019 முதல் இருந்து
வருகிறார். முன்பு 2013 முதல் 2014 வரை முதலமைச்சராக இருந்தார். இவரது தந்தை Shibu Soren, ஜார்க்கண்ட் முதலமைச்சராக 3 முறை இருந்துள்ளார்.
இந்திய தேசிய லோக் தளம் கட்சியை சேர்ந்த Devi Lal, ஹரியானா மாநில முதலமைச்சராக 1977 முதல் 1979 மற்றும் 1987 முதல் 1989 வரை என இரண்டு முறை இருந்துள்ளார். இவரது மகன் Om Prakash Chautala 4 முறை முதலமைச்சராக இருந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில்
காங்கிரஸ் சார்பில் 2008 முதல் 2010 வரை முதலமைச்சராக இருந்தவர் Ashok Chavan... இவர் அப்பா Shankarrao Chavan, 1975 முதல் 1977 வரை மற்றும் 1986 முதல் 1988 வரை என இரண்டு முறை முதலமைச்சராக இருந்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்று, முதலமைச்சராக ஆனவர்
Vijay Bahuguna. இவர் காங்கிரஸ் சார்பாக உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக 2012 முதல் 2014 வரை இருந்தார். தற்போது
Vijay Bahuguna, பாஜகவில் உள்ளார். இவரது தந்தை
Hemwati Nandan Bahuguna,
காங்கிரஸ் சார்பாக உத்தரப் பிரதேச முதலமைச்சராக 1973 முதல் 1975 வரை இருந்தார்.
குறைந்த வயதில் முதலமைச்சர் ஆனவர் என்ற பெருமைக்குரியவர், தற்போதைய அருணாச்சல பிரதேச முதலமைச்சர் Pema Khandu. இவர் 2016ல் இருந்து முதலமைச்சராக உள்ளார்.
இவரின் தந்தை Dorjee Khandu, 2007 முதல் 2011 வரை முதலமைச்சர் இருந்தார். Dorjee Khandu , விமான விபத்தில் உயிரிழந்தார்.
இந்தியாவில் தற்போது உள்ள அரசியல் சூழலில் இந்தப் பட்டியலில் இன்னும் சில ஆண்டுகளில் பல பேர் இணையலாம்.
Comments
Post a Comment