ஆம்புலன்ஸ் உருவானது எப்படி?


ஒரு வாகனம் சாலையில் நம்மை கடந்து செல்லும் போது, யாராக இருந்தாலும் வழி விடுவார்கள். சிலர் கடவுளை வணங்குவார்கள்.

சிலர் பதட்டத்துடன் என்னவென்று பார்ப்பார்கள்.. அப்படிப்பட்ட வாகனம்  ஆம்புலன்ஸ்.  சரி நோயாளிகளை அவசரமாக அழைத்த செல்ல உதவும் இந்த ஆம்புலன்ஸ் உருவான கதையை இப்போது பார்ப்போம்.  

ஆம்புலன்ஸ் உருவானது காரணமே, போர்கள் தான்.. போரில் அடிப்பட்ட வீரர்களை மருத்துவமனை அல்லது முகாம்களுக்கு தூக்கி செல்ல, முதலில்

ஸ்டெக்சர் வடிவில் இரண்டு கம்புகளில் துணியை கட்டி நடுவில் அடிபட்டவரை படுக்க வைத்து தூக்கிச் சென்றனர். முகாமுக்கு போர்களத்திற்கும் இடையே, நீண்ட தூரம் இருந்ததால் விரைந்து  செல்ல ஏதுவாக குதிரை வண்டி  பயன்படுத்தப்பட்டது.

சிலுவைப்போர் நடந்த 11ம் நூற்றாண்டில் போர் வீரர்களைக் காப்பாற்ற குதிரை வண்டிகளை இங்கிலாந்தில் பயன்படுத்தினார்கள். குதிரை வண்டி பின்பு மோட்டார் வாகன வண்டி   என பல பரிமாணங்கள் கடந்து இன்றைய நவீன ஆம்புலன்ஸ் வந்தது. தற்போதைய  ஆம்புலன்ஸ் நவீன நடமாடும் மருத்துவமனையாக உள்ளது. 


1487ம் ஆண்டில் ஸ்பெயின் Malaga முற்றுகை காரணமாக ஏற்பட்ட Granada போரில்  ராணுவத்திற்காகப் போர்க்களத்தில் முதல்முறையாக ஆம்புலன்ஸ் சேவைக்காக தனி குழு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது என்னமோ 19வது நூற்றாண்டில்தான். லண்டனில் காலரா பரவி பலர் அவதிக்கு உள்ளான போது, 1832ல் பாதிப்பு உள்ளான நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர, ஆம்புலன்ஸ் வாகனம் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் 1861 முதல் 1865 வரை நடந்த உள்நாட்டுப்போரில்,

ராணுவ மருத்துவர்களான

Joseph Barnes மற்றும் Jonathan Letterman ஆகிய இருவரும்,

முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட உபகரணங்கள் அடங்கிய நான்கு சக்கரங்கள் கொண்ட  வண்டியாக ஆம்புலன்ஸை வடிவமைத்தனர். இந்த வாகனங்களை ஆம்புலன்ஸ் வேகன் என்று அழைத்தார்கள். 


ஜெர்மனியில் 1902 ஆம் ஆண்டில், ரயில் விபத்துக்களில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, ஆம்புலன்ஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில்  அமெரிக்கா ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இப்படி பல்வேறு இடங்களில்  ஆம்புலன்ஸ்  பல பரிமாணங்களை அடைந்தது. 


இந்தியாவில் முதல் ஆம்புலன்ஸ் சேவை

1914ல் மும்பையில்  அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில்  108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்படும் வரை கட்டண ஆம்புலன்ஸ் சேவையே இருந்தது. 108 ஆம்புலன்ஸ் சேவையானது 2005‌ ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகராக இருந்த ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு பின்னர் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது.

அது ஏன் 108 என்ற நம்பரை தேர்வு செய்தார்கள்.

ஜனவரி 8 அன்று உலக ஆம்புலன்ஸ் தினமாகும்.  ஜனவரி 08 என்பதன் அடையாளமாகவே, 1 08 என்ற எண்ணை வைத்துள்ளார்கள். 


கொரோனா தொற்று காரணமாக ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள தால் ஏரியில் தனக்கு சொந்தமான படகு வீட்டை

தாரிக் அகமது பட்லூ என்பவர் கடந்த டிசம்பரில்

சுகாதார வசதிகளுடன் கூடிய  படகு ஆம்புலன்ஸாக

மாற்றியுள்ளார் . 

மலைப்பகுதியான

உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டர், விமான ஆம்புலன்ஸ்கள் சோதனையில் உள்ளது. 


மனித உயிரைக் காக்க  அவசரமான நேரத்தில் அவசியமானது ஆம்புலன்ஸ்.





Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு