சென்னையின் அடையாளங்களில் ஒன்று..?
சென்னையின் அடையாளங்களில் ஒன்று.....
சென்னையின் முக்கிய பகுதிகளில் எங்கு சென்றாலும், ஒரு மேம்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். அந்த அளவிற்கு சென்னையில் மேம்பாலங்கள் பெருகிவிட்டது. இப்படி சென்னையின் அடையாளமாக மாறி போகும் மேம்பாலங்களில் பழமையான மேம்பாலம் அண்ணா மேம்பாலம். இதை ஜெமினி பிரிட்ஜ் என்று சொல்வார்கள்.
ரயில்வே பாதை, ஆறுகள், கால்வாய்கள் ஆகியவற்றின் குறுக்கே பாலம், மேம்பாலம் கட்டுவதற்கு வழக்கம் இருந்தபோது, சென்னை அண்ணா சாலையில்
1973இல் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டப்பட்டது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தமிழ்நாட்டில்
கட்டப்பட்ட முதல்
மேம்பாலம் இதுவாகும்..
80 களில் தொடங்கி தற்போது வரை,
தமிழ் சினிமாவில் சென்னையை காட்ட வேண்டும் என்றால், அண்ணா மேம்பாலத்தையே காட்டுவார்கள். இப்படி தவிர்க்க முடியாத சென்னையின் அடையாளமாக மாறி போனது அண்ணா மேம்பாலம். 1973 ஜூலை 1ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அண்ணா மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது.
அண்ணா மேம்பாலம் 1,250
அடி நீளமும், 40 அடி
அகலமும், 14 அடி உயரமும் கொண்டது.. 21 மாதங்களில்
66 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.
இது கட்டப்பட்ட போது இந்தியாவிலேயே நீண்ட மேம்பாலம் இதுதான்.
ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 20,000 வாகனங்கள் இப்பாலத்தின் வழியாக செல்கின்றன.
அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் அமெரிக்கா தூதரகம் உள்ளதால் இங்கு தற்போது பாதுகாப்பு போலீசார் கண்காணிப்பில் உள்ளனர்.
அண்ணாசாலையில் ஜெமினி சந்திப்பில் அமைந்திருந்ததால் இதை மக்கள் ஜெமினி மேம்பாலம் என்றே அழைத்தனர். இந்த மேம்பாலத்தை திறந்து வைத்துப் பேசிய முதலமைச்சர் கருணாநிதி இது "ஜெமினி மேம்பாலம் அல்ல. அறிஞர் அண்ணா மேம்பாலம்" என்று அறிவித்தார்.
Comments
Post a Comment