தமிழகத்தில் சாராய வரலாறு
ஒரு பொருள் உங்கள் வீட்டிற்கும் உடலுக்கும் கேடு என்றால் அந்த பொருளை நீங்கள் வாங்குவீர்களா? ஆனால் தமிழ்நாட்டில், அப்படி ஒரு கேடான பொருளைச் சொல்லியும் கூட, தினந்தோறும் கோடிக்கணக்கில் வருமானம் வரும் அளவு விற்கிறது என்றால், அந்தப் பொருள் மது!
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வாசகத்துடன், படு ஜோராக தமிழக அரசால் மது விற்கப்படுகிறது.
சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே, மது விற்பனைக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தன. காந்தி, ராஜாஜி, பெரியார் உள்ளிட்ட தலைவர்களிடம் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு.. ஆனால் மது விலக்கு கொள்கையில் அனைவரும் ஒத்த கருத்துடனே இருந்தார்கள்.
இதன் விளைவாக, சுதந்திரத்திற்கு முன்பாக
1937ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண தேர்தலில், தங்கள் கட்சி வெற்றி பெற்ற மாகாணங்களில், மூன்றாண்டுகளில் பூரண மதுவிலக்கைக் கொண்டுவர காங்கிரஸ் முடிவு செய்தது. இதை அப்போது கடுமையாக அமல்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அதாவது அன்றைய madras presidency. உபயம் அன்றைய மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி.
பின்னர் 2ஆம் உலக போர் சமயத்தில்
மாகாண முதலமைச்சர்கள் பதவி விலகியதை அடுத்து, மதுவிலக்கும் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து நாடு முழுவதும் மது விற்கப்பட்டு வந்த நிலையில், சுதந்திரம் வாங்கிய பிறகு முழுமூச்சாக மதுவிலக்கை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டின.
சுதந்திரம் பெற்ற பிறகு, தமிழகத்தின் முதல் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், மதுவிலக்கை அமல்படுத்துவதில் தீவிரமாக இருந்தார். அவரின் கடும் முயற்சியால், காந்தி பிறந்த நாளான 1948 அக்டோபர் 2ஆம் தேதி மதுவிலக்கை அமல்படுத்தினார்.
அன்று தமிழகத்தில் தொடங்கிய மதுவிலக்கு, சுமார் கால் நூற்றாண்டு காலம் தீவிரமாக இருந்தது. அந்த சமயத்தில், இந்தியாவின் மற்ற மாநிலங்கள், மதுவிலக்கை அமல்படுத்துவதில் திணறி வந்தன.
காங்கிரஸுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அண்ணா தலைமையிலானா திமுக அரசும், மதுவிலக்கில் உறுதியாக இருந்தது. ஆனால், ரூபாய்க்கு 2 படி அரிசி உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தியதால், தமிழக அரசின் கஜானா ஆட்டம் காண ஆரம்பித்தது. இதனையடுத்து,
மதுவிலக்கை ரத்து செய்ய கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தீர்மானித்தது.
இதற்கு ராஜாஜி, காமராஜர், காயிதே மில்லத் போன்ற தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜாஜி, கொட்டும் மழையில் நனைந்துகொண்டு, கருணாநிதியின் வீட்டிற்கு நேரில் சென்று, மதுவிலக்கை தள்ளிவைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இருப்பினும், 1971 ஆகஸ்ட் 30ஆம் தேதி மதுவிலக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதாவது ரத்து செய்யப்படவில்லை; இது தற்காலிகமான நடவடிக்கைதான். மீண்டும், கூடிய விரைவில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று, அன்றைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி தெரிவித்தார். மதுவின் தீமையை நாட்டு மக்களுக்கு விளக்க, அன்றைய திமுக பொருளாளர் எம்ஜிஆர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பிரச்சாரங்கள் செய்யப்பட்டது.
சொன்னபடியே கருணாநிதி,
1974ம் ஆண்டு மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்தினார். 1983ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி, எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது, மீண்டும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அதோடு தமிழகத்தில், மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக அரசே, டாஸ்மாக் என்ற நிறுவனத்தை 1983-ல் துவக்கியது.
1989-ல், அன்றைக்கு ஆட்சியில் இருந்த கருணாநிதி, மலிவு விலை மதுவை அறிமுகம் செய்தார். அதற்குப் பெண்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழவே, பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதனை ரத்து செய்தார்.
தொடர்ந்து கள்ள சாராயம் காரணமாக அதிகமான உயிரிழப்பு, அரசின் கஜானா என்று பல்வேறு காரணங்களைக் காட்டி, மீண்டும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் 2வது ஆட்சி காலத்தில்
2003ஆம் ஆண்டு முதல், டாஸ்மாக் வழியாக, அரசே மதுவை நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கியது. அந்த நடைமுறை தான் தற்போது வரை தொடர்கிறது.
1983ல் எம்ஜிஆர்
டாஸ்மாக்-கை ஆரம்பித்த போது, பாலாஜி டிஸ்டிலரீஸ், எம்.பி. டிஸ்டிலரீஸ், மோகன் புரூவரீஸ் அண்ட் டிஸ்டிலரீஸ், சிவாஸ் டிஸ்டிலரீஸ், சாபில் டிஸ்டிலரீஸ் ஆகிய ஐந்து நிறுவனங்களுக்கு மட்டுமே மது தயாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டது.2001ல் முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா,
மிடாஸ் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தார். இந்த மிடாஸ் நிறுவனம், சசிகலா உறவினர் பெயரில் இருந்தது.
2006ல் 5வது முறையாக முதலமைச்சரான கருணாநிதி,
எஸ்.என்.ஜே. டிஸ்டிலரீஸ், கால்ஸ் டிஸ்டிலரீஸ், எலைட் டிஸ்டிலரீஸ், இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அண்டு ஒயின், GOLDEN VATS போன்ற நிறுவனங்கள் மது தயாரிக்க, கூடுதலாக அனுமதி அளித்தார்.
Elite Distilleries, A M Breweries Private Limited ஆகியவை திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான ஜெகத்ரட்சகன் குடும்பத்துக்கு சொந்தமானவை.
GOLDEN VATS
நிறுவனம் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு நெருங்கியவருக்கு சொந்தமானதாக கூறப்பட்டாலும், இதை அவர் மறுத்து வருகிறார்.
இப்படி தமிழகத்தில் செயல்படும் மதுபான ஆலைகள் திமுக, அதிமுக வேண்டப்பட்டவர்களுக்கு சொந்தமானதாகவே உள்ளது.
கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே உள்ள கோபத்தில், சட்டமன்றத்தை கட்ட விடாமல் தடுப்பார்கள்; கட்டியதை மருத்துவமனையாக மாற்றுவார்கள். ஆனால் இரண்டு பேருக்கும் நெருக்கமான நிறுவனங்களிலிருந்து மது வாங்குவது மட்டும் நின்றதே இல்லை.
இந்தியாவில், முழுவதும் மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்கள் என்று பார்த்தால் குஜராத், பீகார், மிசோரம், நாகலாந்து, மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு ஆகியவை மட்டுமே.
2003 - 04 காலகட்டத்தில் 3,600 கோடி ரூபாயாக இருந்த டாஸ்மாக் வருமானம், தற்போது 30 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது என்றால், மதுவின் வளர்ச்சியை பார்த்துக்கொள்ளுங்கள்..!
அசுர வளர்ச்சி!
Comments
Post a Comment