சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்கும்?
2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்கும்?
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தமிழக அரசியல் மற்றும் தேர்தலில், அரை நூற்றாண்டாக ஆளுமை செலுத்திய திமுக தலைனக்ஷவர் ணணரகருணாநிதியும்,கால் நூற்றாண்டு காலமாக ஆளுமை செலுத்திய ஜெயலலிதாவும் ரன் இல்லாமல் நடக்கும் சட்டசபை தேர்தல் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரச்சாரம் என்றால் வேனிலேயே தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, அந்தந்த தொகுதி மக்களை, அந்தந்த தொகுதிகளிலேயே சந்தித்து, வாக்கு சேகரிப்பில் கட்சித் தலைவர்கள் ஈடுபடுவார்கள். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முந்தைய தேர்தல்களில், வேன்களின் முன் இருக்கையில் அமர்ந்து, பிரச்சாரத்தை மேற்கொண்டார். 2011 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லிfப்ட் மூலம் வேனின் மேற்புறத்தில் அமர்ந்து, பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதனால், தொண்டர்கள் அனைவருக்கும், பிரச்சாரத்தின்போது தன் முகம் தெளிவாக தெரியும்படி பார்த்துக்கொண்டார்.
அதேபோல் திமுக தலைவர் கருணாநிதி, வயது முதிர்வின் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அந்தந்த மாவட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
கட்சியின் முக்கிய தலைவர்கள் மட்டுமின்றி அந்த கட்சியின் தலைமை கழக பேச்சாளர்கள், அந்தக் கட்சியில் உள்ள சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரையும் பல்வேறு தொகுதிகளுக்கு கட்சியின் தலைமை, ஏற்பாடுகளை செய்து கொடுத்து, பிரச்சாரம் செய்ய வைக்கும். மேலும் அந்தந்த கட்சி வைத்துள்ள, தங்களுக்கு சொந்தமான சேனல்களில் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்களின் சுவாரசியமான பிரச்சாரத்தை, இரவில் மறுஒளிபரப்பு செய்து வந்தார்கள்.
முக்கிய கட்சிகள், நகரங்களில் வார்டு வாரியாகவும், கிராமங்களில் கிளை வாரியாகவும் பூத் கமிட்டி உறுப்பினர்களை கொண்டு, தேர்தல் அலுவலகம் அமைத்து, தினசரி வீடு வீடாக சென்று, தங்களது பகுதிகளில் உள்ளவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்கள். தேர்தல் அலுவலகங்களுக்கு அந்த தொகுதியினுடைய வேட்பாளர், கட்சி தலைமை நியமித்த தேர்தல் பொறுப்பாளர், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியுடைய முக்கிய நிர்வாகிகள் வந்து, அப்பகுதியில் கட்சியினுடைய செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு ஆகியவற்றை குறித்து கலந்து ஆலோசித்து, வெற்றிக்கான வியூகங்களை வகுப்பார்கள்.
தேர்தல் காலத்தில் அந்தந்த கட்சியினுடைய
பிரச்சார பாடல்கள் வெளியிடப்பட்டு, அதன்மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
இப்படி தங்களுடைய திட்டங்களை அந்தக் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு வீடாக அமர்ந்து திண்ணைப் பிரச்சாரம் செய்வார்கள்.
இப்படி நடைபெற்ற பிரச்சாரங்கள், தற்போது சமூக வலைதளங்களால் தனிநபரின் வீட்டிற்குள் தலைவர்கள் சென்று பிரச்சாரம் செய்யக் கூடியதாக அமைந்துள்ளது.
தற்போது ஒரு கட்சியின் கொள்கைகளையும் அதன் திட்டங்களையும் ஒவ்வொரு நபரிடமும் சென்று விளக்குவதற்கு பதிலாக, தற்போது கட்சிகளின் கொள்கைகளை, திட்டங்களை வீடியோவாகவோ, மீம்ஸாகவோ, கேலி சித்திரமாக வரைந்து YouTube, Facebook, Twitter, Instagram, WhatsApp போன்ற சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்கிறார்கள்.
2021 தமிழக களத்தில் பெரும் கூட்டங்களை கூட்டுவதற்கு தடையாக கொரோனா உள்ளது. இதனால் பெரும் கூட்டங்களை கூட்டி வாக்கு சேகரிக்க முடியாத நிலை ஏற்படலாம். அதனால் அரசியல் கட்சிகள் பெரிதும் நம்பியிருப்பது இந்த சமூக வலைதளங்களையே.
இதனிடையே, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு தேர்தல் வேலையை துவங்கி உள்ள திமுக, ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்துள்ளது.
ஒரு கட்சிக்கு தனியாக டிவி சேனல்கள், பத்திரிக்கைகள் இருக்கிறதோ இல்லையோ, யூடியூப் சேனல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற அத்தியாவசியத் தேவை தற்போது உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட அந்த கட்சியினுடைய கொள்கைகள், விமர்சனங்களுக்கு விளக்கங்கள், முக்கிய கூட்டங்கள், ஆலோசனைகள், சந்திப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் வீடியோவாக பதிவிடலாம். மேலும், பெரும்பாலான சாமானியர்கள் ஒரு வீடியோவை தேடி பார்ப்பது இந்த YouTubeல் தான். YouTubeல் திமுக IT wing பெயரில் சேனல் உள்ளது. அதில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட subscribers உள்ளனர். திமுக நிர்வாகிகள் நாடாளுமன்றம் சட்டமன்றத்தில் பேசிய வீடியோ update செய்யப்படுகிறது. அதேபோல் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் பெயரிலும் ஒரு YouTube channel உள்ளது. அந்த சேனலில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட subscribers உள்ளனர். இதில், திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் வீடியோக்கள், கட்சி சார்ந்து ஸ்டாலின் வெளியிடும் அறிவிப்புகள் ஆகியவை வீடியோவாக வெளியிடப்படுகின்றன. அதேபோல் அதிமுகவிற்கும் YouTube channel உள்ளது. ஆனால் அந்த சேனலில் கடந்த 8 மாதங்களாக எந்த update டும் செய்யப்படவில்லை. மேலும் subscribers காண்பிக்கப்படவில்லை. தேசிய கட்சியான பாஜகவிற்கு தேசிய அளவில் Bharatiya Janata party என்ற பெயரில் ஒரு YouTube channel உள்ளது. அந்த channel-லில் 31 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட subscribers உள்ளநர். நரேந்திர மோடி பெயரிலும் YouTube channel உள்ளது. அதேசமயம் தமிழக அளவிலும் BJP TamilNadu official என்ற பெயரில் ஒரு YouTube channel உள்ளது. இதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட subscribers உள்ளனர். மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸில் தேசிய அளவில் Indian national Congress என்ற பெயரில் ஒரு YouTube channel உள்ளது. இதில் 11 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட subscribers உள்ளனர். Rahul Gandhi பெயரிலும் YouTube channel உள்ளது. தமிழக அளவிலும் Inc TamilNadu என்ற YouTube channel உள்ளது.
சமூக வலைதளங்களில் ஒன்றான Twitterயில் கிட்டத்தட்ட எல்லா கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி தலைமையின் பெயரில் உள்ள IDகள் எல்லாம் activeவாக உள்ளது. இதன்மூலம் தினமும் தங்களது அறிக்கைகளையும் சாதனைகளையும் போராட்டங்களையும்
பதிவிடுகின்றனர்.
திடீர் திடீரென்று
ஒரு சம்பவத்தை முன்வைத்து, தேசிய அளவில் trending செய்து அனைவரின் கவனத்தையும் பெற வைக்கிறார்கள். அதிமுகவை Twitter-யில் 2 லட்சத்து 92 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். அதேபோல் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை 6 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் , துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் இரண்டு I'dகள் உள்ளது. ஒன்றில் 9 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் பின்தொடர்கிறார்கள். மற்றொன்றில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் பின்தொடர்கிறார்கள்.
திமுகவை Twitterயில் 4 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கிறார்கள். அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை 10 லட்சத்து 70 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் பின்தொடர்கிறார்கள். இதேபோல் தமிழக பாஜக பிரிவை 3 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், தமிழக காங்கிரஸ் பிரிவை 1 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் பின் தொடர்கிறார்கள். திடீரென்று பாஜகவுக்கு எதிராக திமுக ஆதரவாளர்கள் சில செய்திகளை trending செய்வதும், திமுகவுக்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் சில செய்திகளை trending செய்வதும் தற்போது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் பாமக நிறுவனர் ராமதாஸை 2 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை 1 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் பின்தொடர்கிறார்கள்.
Facebookக்கை பொறுத்தவரை கட்சியினுடைய முழுநீள அறிக்கைகள்,
வீடியோ இதில் வெளியிடப்படுகின்றன. தமிழக கிராமங்களில் பெரும்பாலானோர் Facebookக்கை பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக்கில் அதிமுகவை 2 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை 2 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் பின்தொடர்கிறார்கள். திமுகவை 8 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும்,
அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை
21 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களும் பின்தொடர்கிறார்கள். தமிழக பாஜக பிரிவை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களும், தமிழக காங்கிரசை 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் பின்தொடர்கிறார்கள்.
மேலும் பாமக நிறுவனர் ராமதாஸை 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை 2 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் பின்தொடர்கிறார்கள்.
Instagram. இதில் எந்த ஒரு பதிவையும் வெறும் எழுத்து வடிவில் பதிவிட முடியாது, வீடியோவாகவும், போட்டோவாகவும் மட்டும் தான் பதிவிட முடியும். டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு டிக் டாக் ஹீரோ, ஹீரோயின்கள் தங்களது வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளதால், அவர்களது ரசிகர்களும் இன்ஸ்டாகிராமிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் இன்ஸ்டாகிராமின் மவுசு எகிறியுள்ளது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களில் ஐடிகள் இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக இல்லை.
WhatsAppயை பொருத்தவரை ஒரு குழு ரகசியமாக இயங்கவும் குறிப்பிட்ட நபர்களுக்கு தகவல்களை அனுப்பவும் பயன்படுகிறது. மேலும் இதில் வாய்ஸ் ரெக்கார்டிங், சாட்டிங், போட்டோக்கள் வீடியோக்கள் பிற சமூக வலைதளங்கள் உடைய லிங்குகள் போன்றவற்றை அனுப்புவதற்கும் பயன்படுவதால், அரசியல் கட்சிகள் தங்களது மாவட்ட அளவிலும் , ஒன்றிய அளவிலும் குழுக்கள் அமைத்து செயல்படுகின்றன. மேலும் கட்சியினுடைய கூட்டங்கள் குறித்த நேரத்தில் ஒன்று கூடுதல் போன்றவை வாட்ஸ்அப் மூலமாகவே தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. திடீரென்று ஏதேனும் ஒரு வாசகத்தை தேசிய அளவில் ட்ரெண்டிங் செய்வதற்கு, ஒரே நேரத்தில் அனைவரும் பதிவிடுவதை முன்கூட்டியே முடிவு செய்வது உள்ளிட்டவை இந்த வாட்ஸ்அப் குழுவில் தீர்மானிக்கப்படுகிறது.
சமூக வலைதளத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டுமானால் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையையும் பார்க்க வேண்டும். இந்தியா முழுவதும் 36 சதவீதத்தினர் இணைய தளத்தைப் பயன்படுத்துகின்றனர். இதில் நகர்ப்புறத்தில் 51 சதவீதம் பேரும், கிராமப்புறத்தில் 27 சதவீதம் பேரும் உள்ளனர். இணையத்தை பயன்படுத்துவதில் மூன்றில் இரண்டு பங்கு பேர் 12 வயதிலிருந்து 29 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். தமிழகத்தில் 47 சதவீதத்தினர் இணைய தளத்தை பயன்படுத்துகின்றனர். இப்படி இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களிலும், இளம் வயதினருமாக உள்ளனர்.
தற்போது கொரோனா தொற்று காரணமாக பெரும் கூட்டம் கூடட முடியாத நிலை உள்ளதால்,
சமூக வலைத்தளங்களே 2021 தேர்தலில் முக்கிய பங்காற்றும். இருப்பினும் சமூக வலைதளங்களில் பலர் ஆக்டிவாக இயங்கினாலும் தமிழகத்தில் பெரும்பாலான அடித்தட்டு மக்கள், கிராமப்புறங்களில் உள்ளவர்கள், 30 வயதை கடந்தவர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களை பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. இவர்களிடம் கட்சிகள் எப்படி பிரச்சாரங்களையும் எடுத்துச் செல்லப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Comments
Post a Comment