ஞாயிறு விடுமுறை எப்படி வந்தது?

ஞாயிறு விடுமுறை எப்படி வந்தது? 

நண்பர்களைச் சந்திப்பதாக  இருக்கலாம்; கொண்டாட்டங்களாக இருக்கலாம்... அதற்கான நாளொன்றைத் தேர்வு செய்யச் சொன்னால், யாராக இருந்தாலும் சந்தேகமில்லாமல்  ஞாயிற்றுக்கிழமையைத் தேர்வு செய்தார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் பிடித்த நாள் - ஞாயிற்றுக்கிழமை. காரணம் அன்று விடுமுறை நாள். 


உலகில் பெரும்பாலான நாடுகளில் ஞாயிறு விடுமுறை. இந்த நாடுகள், பெரும்பாலும் கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாகவும், அல்லது பிரிட்டனின் காலனித்துவ நாடாக இருந்து இருக்கும். 


இயேசு கிறிஸ்து உயிரிழந்த நாளான ஞாயிற்றுக் கிழமையை, ஓய்வு நாளாக கிறிஸ்துவர்கள் அனுசரிக்கின்றனர். ஹீப்ரு மற்றும் கிறிஸ்தவ நாட்காட்டிகளில், ஞாயிறுதான், வாரத்தின் முதல் நாளாக இருக்கிறது.  


கிறிஸ்துவத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை முக்கிய நாளாக மாற காரணம் ரோம பேரரசன் Constantine 1 . 


Constantine 1. கிறிஸ்துவத்தை தழுவிய முதல் பேரரசர். 


ரோமர்களின் கடவுள்களில் ஒருவர்  சூரியன். அந்த சூரிய கடவுளுக்கு உரிய நாள் ஞாயிற்றுக் கிழமை.  ஹிந்துக்களின் நம்பிக்கையின் படி, சூரிய தேவனுக்கு உகர்ந்த நாள் ஞாயிற்றுக் கிழமை தான். அப்படி ஞாயிறு கிழமையுடன் மிகுந்த நெருக்கம் கொண்டு இருந்த பேரரசர்

Constantine I, பொது யுகம் 321ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தினமாக, அதாவது ஒய்வு தினமாகவும், கடவுளை வழிபடும் தினமாகவும் அறிவித்தார். 


இதனையடுத்து கிறிஸ்துவத்தில் ஞாயிற்றுக்கிழமையின் முக்கியத்துவம் அதிகமானது. பின்னர் ஐரோப்பா முழுவதும் கிறிஸ்துவம் பரவியபோது, அனைத்து நாடுகளிலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமானது. 


இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது, ஆலைகளில் தொழிலாளர்கள், வாரத்தின் எல்லா நாட்களும் வேலை செய்ய வேண்டி இருந்தது. மில் தொழிலாளர்களின் தலைவராக இருந்த Narayan Meghaji Lokhande வாரத்தில் 6 நாட்கள் உழைத்தால், ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்கவேண்டும் என்ற திட்டத்தை ஆங்கில ஏகாதிபத்திய அரசிடம் முன்வைத்தார்.  


ஆனால் இதை ஆங்கிலேய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.  இந்த கோரிக்கையை முன்வைத்து 7 ஆண்டு நீண்ட போராட்டம் நடத்தியதன் விளைவாக, 1890ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையை வார விடுமுறை தினமாக அறிவித்தது அன்றைய ஆங்கிலேய அரசு. சுதந்திர பெற்று பிறகும் இந்த நடைமுறை தொடர்கிறது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சுதந்திரம் பெற்ற பிறகு, இந்த விடுமுறை குறித்து இந்திய அரசு  எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. 


- தினேஷ் குமார் ஜெயவேல் -

Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு