முதல் ஊழல்

 படேல் மறைவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைவர், நாட்டின் பிரதமர் என்று 

சர்வ வல்லமை பொருந்தியவராக மாறிவிட்டார் நேரு. ஆனால் தனது அரசின் மீது, சொந்த மருமகனே குற்றச்சாட்டுகளை அடுக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. 


1957 டிசம்பர் 16ஆம் தேதி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அன்று நேருவின் மருமகனும், Raebareli தொகுதி எம்பியுமான Feroze Gandhi பேசுவதற்கு சபாநாயகரிடம் வாய்ப்பு கேட்டு இருந்தார். 


Feroze, இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உள்ள, மாமனாருக்கு உதவும் மருமகனாக அல்ல; மாமனார் அரசின் முறைகேடுகளைக் கிழித்து எறியும் மருமகனாக இருந்தார்.

எப்பொழுதெல்லாம் Feroze Gandhi பேசுகிறாரோ அப்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்புவார். 


அந்த மாதிரி தற்போதும் ஏதோ புயலைக் கிளப்பப் போகிறார் என்று எதிர்க்கட்சிகளுக்கு பொறி தட்டியது. மற்றொருபுறம், நேருவின் சகாக்களுக்கோ கிலி பிடித்தது. இந்த முறை அவர் குண்டு வீசியது, நேருவின் நெருங்கிய நண்பரும், நிதியமைச்சருமான டி.டி.கிருஷ்ணமாச்சாரி மீது. 


மெதுவாக எழுந்து மைக்கை பிடித்த Feroze Gandhi, "மரியாதைக்குரிய நிதியமைச்சர் டி.டி.கே, என்னை நேரு குடும்பத்தின் வளர்ப்பு நாய் என்று அழைக்கிறார். அதே நேரத்தில் டி.டி.கே., தன்னை பாராளுமன்றத்தில் தூண் என்று அழைத்துக் கொள்கிறார். இப்போது, ஒரு நாய், தூணை பார்த்து என்ன செய்யுமோ, அதைத் தான் செய்யப் போகிறேன்" என்று கூறி, எல்லோரையும் புன்னகையுடன் பார்த்தார். 


இந்த சிறிய நிசப்தம், ஏதோ பெரிய புயலுக்கான அறிகுறி என்று காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு புரிந்துவிட்டது. 


தொடர்ந்து பேசிய Feroze Gandhi, "Haridas முMundhra என்பவருக்குச் சொந்தமான Richardson Cruddas, Jessops & company, Smith Stanistreet, Osler lamps, Agnelo brothers, British India Corporation ஆகிய 6 நிறுவனங்களின் பங்குகளை நாடாளுமன்றத்தின் குழந்தையாக உருவாக்கப்பட்ட LIC, 1,26,86,100 ரூபாய்க்கு வாங்கியது. இதில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்று உள்ளது என்று, புள்ளி விபரங்களுடன் குற்றச்சாட்டுகளை அடுக்க ஆரம்பித்தார். 


இந்தியத் தொழில்துறையின் நிழலுலக மனிதர், மோசடி பேர்வழி என்றெல்லாம் அடையாளம் காட்டப்பட்ட Haridas Mundhra-வுடன் எல்ஐசி எப்படி பரிவர்த்தனை ஈடுபட்டது? அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தின் பணத்தைக் கொள்ளையடிக்க நடந்த சதியா இது? நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சரிக்கும் Mundhraவுக்கும் என்ன தொடர்பு? என்று அடுத்தடுத்து கேள்விக் கணைகளை தொடுத்தார். 


நேருவின் முகம் வெளுக்க ஆரம்பித்தது. Feroze Gandhi எழுப்பிய கேள்விகள், நிதியமைச்சரைப் பார்த்து எழுப்பப்பட்டதாக நேரு பார்க்கவில்லை; தன்னை நோக்கியே அவர் எழுப்புவதாக கருதினார். 


விஷயம் பத்திரிகைகளுக்குச் சென்றது. பத்திரிக்கைகள் எழுதி தீர்த்தன. நாடு முழுவதும் Mundhra ஊழல் குறித்து டீ கடை வரை விவாதங்கள் நடைபெற்றன. 


இந்த எல்ஐசி நிறுவனம் உருவாதற்கு முன்பு, Ramkrishna Dalmia, தன்னுடைய பாரத் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முறைகேடு செய்ததை வெளிக்கொண்டு வந்தவரும் சாட்சாத் Feroze Gandhi தான். 


மத்திய அரசு மீது இவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டு நேரடியாக வந்ததையடுத்து, அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடும் என்று எண்ணிய பிரதமர் நேரு, இந்த ஊழல் குற்றச்சாட்டை பெரிதுபடுத்தாமல் விசாரிக்க வேண்டும் என்று நினைத்தார். 


ஆனால் எதிர்க்கட்சிகளும், Feroze Gandhi-யும் விடுவதாக இல்லை. தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். விஷயம் எல்லை மீறியதை உணர்ந்த பிரதமர் நேரு, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி M. C. Chagla  என்கின்ற Mohammadali Carim Chagla என்பவரை, ஒரு நபர் கமிஷன் தலைவராக நியமித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். 


விசாரணையில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று எண்ணிய, நேர்மைக்கு பெயர்பெற்ற M. C. Chagla, விசாரணை நடைபெறும் போது யார் வேண்டுமானாலும் நேரில் வந்து பார்க்கலாம்; சாட்சியம் அளிக்கலாம் என்று கூறினார். 


விசாரணை தொடங்கியது. 


ப்ளூசிப் நிறுவனங்கள் அல்லது பிரபல நிறுவனங்கள், சிறந்த நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யவேண்டும் என்பது எல்ஐசியின் கொள்கை. ஆனால் Mundhra நிறுவனம் அந்த பட்டியலில் வரவில்லை. எல்ஐசியின் முதலீட்டு ஆலோசனை குழுவும் Mundhra நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு பரிந்துரைக்கவில்லை. இதன்மூலம், முறைகேடு நடந்து இருக்கிறது என்பதை நீதிபதி M. C. Chagla உறுதிப்படுத்திக் கொண்டார். 


Mundhra எப்படி இதற்குள் வந்தார் என்பதைக் கொஞ்சம் பார்ப்போம். இவர் பிரிட்டிஷ் இந்தியா கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை வாங்க முயற்சிக்கிறார். அந்நிறுவனத்தின் பங்குகளை 10 முதல் 12 ரூபாய்க்கு வாங்கி, அதன் விலையை 14 ரூபாய் வரை ஏற்றி, லாபத்தை அள்ளினார். 


திடீரென கல்கத்தா பங்குச்சந்தை இறங்க ஆரம்பிக்கிறது. ஒட்டுமொத்த சரிவில் Mundhra-வின் நிறுவன பங்குகளின் விலையும் படுகுழியில் விழுந்தன. இப்படிப் பங்குச்சந்தையில் மங்காத்தா விளையாடி பணத்தை அள்ளலாம் என்று நினைத்த Mundhra-வின் கனவில் மண் விழுந்து, மொத்த பணமும் அம்பேல் ஆனது. மொத்த பணத்தையும் இழந்தது அல்லாமல் வங்கியிலிருந்து கடனாக வாங்கி பங்குச் சந்தையில் போட்டு இருந்த பணமும் காலியானது. 


அவர் 1956ல் வங்கியில் வாங்கி இருந்த கடன் 3 கோடியே 30 லட்சம். அதுவே 1957ல் 15 கோடியே 60 லட்சமாக வளர்ந்து இருந்தது. இப்படி பல்வேறு கடனில் சிக்கிய Mundhra-விடம் இருந்து எப்படி வசூலிப்பது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் H. V. R. Iyengar, நிதித்துறை செயலர் ஹெச்.எம்.படேல் முழித்துக் கொண்டிருக்கையில், ஒரு பலே திட்டத்தை சொன்னார் Mundhra. தனது நிறுவனத்தின் பங்குகளை LIC வாங்கினால், அதை வைத்து கடனை வசூலித்துக் கொள்ளலாம் என்பதுதான் அந்தத் திட்டம். இந்தத் திட்டத்தின்படி தான் Mundhra நிறுவன பங்குகளை LIC, வாங்கியது. 


எப்படி Mundhraவின் திட்டத்துக்கு உயர் அதிகாரிகள் ஒப்புக்கொண்டார்கள்? ரொம்ப சிம்பிள். காங்கிரஸ் கட்சிக்கு, தேர்தல் உள்ளிட்ட பல சமயங்களில் தாராளமாக நிதியை வழங்கிக் கொண்டிருந்தார் Mundhra. 


ஏற்கனவே கடனில் மூழ்கும் நிறுவனத்தை ஏன் எல்ஐசி வாங்க வேண்டும் என்று, இயல்பிலேயே பத்திரிகையாளரான Feroze Gandhi-க்கு கேள்வி எழவே, என்ன நடந்து இருக்கும் என்பதைத் தோண்டப் போக, ஊழல் பூதம், உலகத்திற்கு தெரிய வந்தது. 


விசாரணைக் கமிஷனில் யார் வேண்டுமானாலும் விளக்கம் அளிக்கலாம் என்று சொன்னதை அடுத்து, தானாக வந்து ஆஜரான மும்பை பங்குச் சந்தையின் தலைவர் கோவர்த்தன தாஸ், "Mundhra-வின் பங்குகளை வாங்கிய LIC-யின் முடிவு, ஆராயப்படாமல் எடுக்கப்பட்ட முடிவு. சந்தை விலையை விட கூடுதல் விலை கொடுத்து Mundhra பங்குகளை LIC வாங்கி இருக்கிறது" என்றார். 


இதுகுறித்து நிதித்துறை செயலர் படேல், ரிசர்வ் வங்கி கவர்னர் H.V.R.Iyengar ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்று இருவரும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தனர். 


வேறு வழியின்றி, இறுதியில் நிதியமைச்சர் டிடி கிருஷ்ணமாச்சாரியை கூண்டில் ஏற்றினார் கமிஷன் தலைவர் M. C. Chagla. எல்ஐசியா? அது என்ன தென்காசி பக்கமா? வாரணாசி பக்கமா? என்கிற தொணியில் பதிலளித்தார் டிடிகே. கோபத்தின் உச்சிக்கு சென்ற M. C. Chagla. "நிதித் துறை அமைச்சகத்திற்கு கீழ் தான் LIC வருகிறது. அந்தத் துறையின் அமைச்சர் நீங்கள். இது எல்லாத்துக்கும் நீங்கள்தான் பொறுப்பு" என்று கறாராக கூறினார். 


முடிவில், இவ்வளவு பெரிய பரிவர்த்தனை நிதியமைச்சர் டிடிகேவுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அறிக்கை சமர்ப்பித்தார். இதனை அடுத்து, வேறு வழியின்றி 1958 பிப்ரவரி 18ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. 


இன்று பல விசாரணை கமிஷன்கள், ஆண்டுக் கணக்கில் விசாரணையை நடத்திக்கொண்டே இருக்கின்றன. ஆனால், M. C. Chagla  தனது விசாரணையை 24 நாட்களுக்குள் முடித்து அறிக்கையை சமர்ப்பித்தார். 


முறைகேடு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, haridas Mundhraவுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 

சொந்த மாமனாராகவே இருந்தாலும் நேர்மை தான் முக்கியம் என்ற மருமகன்கள் இருந்த நாடு இது.




Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு