தமிழக நிதியமைச்சர்கள்

 தமிழக நிதியமைச்சர்கள் 


"சுதந்திரம் கிடைத்த பின் பல மத்திய அரசுகள் அமைந்துவிட்டன. தங்களை முதல் அரசு என பாஜக அரசு நினைக்கக்கூடாது" என்று    நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது  பரபரப்பை ஏற்படுத்தியது.. இதற்கு பதிலளித்த பாஜகவினர்

தமிழகம் மாநிலமாக உருவாக்கிய பின் பல நிதியமைச்சர்கள் பொறுப்பில் இருந்துள்ளனர். ஏதோ இவர் தான் முதல்  நிதியமைச்சர் என்று நினைக்க கூடாது என்று விமர்சித்தனர். 


இதுவரை தமிழகத்தின் நிதியமைச்சர்கள் யார்? யார்? என்பதை பார்ப்போம்.



சுதந்திரத்திற்கு பிறகு 1952ல் அமைந்த முதல் தமிழக அரசில் நிதியமைச்சராக  பதவியேற்ற

சி சுப்பிரமணியன்  தொடர்ந்து 10 ஆண்டு காலம்  பணியாற்றினார். பின்னர் டெல்லி அரசியலுக்கு சென்றவர்

1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலகட்டத்தில் 

மத்திய நிதியமைச்சராகவும் பணியாற்றினார்.  

இவருக்கு 1998ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது கொடுக்கப்பட்டது. 


1962ல் தமிழக நிதியமைச்சராக பொறுப்பேற்ற எம். பக்தவத்சலம் 1963ல்  தமிழக முதலமைச்சரானார். 

ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களின் நிதியில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தார். 


1967ல் திமுக தலைமையில் ஆட்சி அமைந்தபோது முதலமைச்சரான அண்ணா நிதித்துறையை தனது பொறுப்பில் வைத்துக்கொண்டார்.  1971, 1989,1996 ஆகிய காலங்களில் முதலமைச்சரான கருணாநிதியும் நிதித்துறையை தன்வசம் வைத்துக்கொண்டார். 


1977ல் அமைந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில்   நாஞ்சில் மனோகரன் நிதியமைச்சர் ஆனார். பின்னர் நாஞ்சில் மனோகரன் திமுகவுக்கு தாவினார்.  


1980, 1984 ஆகிய எம்ஜிஆர் ஆட்சி காலத்திலும்,1991ல் ஜெயலலிதா ஆட்சியிலும்  நெடுஞ்செழியன் நிதியமைச்சராக இருந்தார். அண்ணா, எம்ஜிஆர் இறந்தபோது நெடுஞ்செழியன் இடைக்கால முதலமைச்சராகவும் இருந்துள்ளார். 


2001ல் அமைந்த அதிமுக ஆட்சியில் பொன்னையன் நிதியமைச்சரானார். 


திமுகவினரால் பேராசிரியர் என்று அன்போடு அழைக்கப்படும் கா.அன்பழகன் 2006ல் அமைந்த திமுக ஆட்சியில் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். 


2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி காலத்தில் ஓ பன்னீர்செல்வம் நிதியமைச்சராக இருந்தார். இவர் 3 முறை முதலமைச்சராகவும் இருந்துள்ளார். 


இந்த வரிசையில் தற்போது நிதியமைச்சராக

பதவியேற்றுள்ள பழனிவேல் தியாகராஜன்,  கொரோனா தொற்று

காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மீட்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறார்?


Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு