அதானியின் ‌‌அபரிமிதமா வளர்ச்சிக

 அந்த அரபிக்கடலோரம்

ஓர் அழகைக் கண்டேனே

என்று 90களில் இளைஞர்கள் அரபிக் கடலின் அழகை கண்டு

ரசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு இளைஞர் அந்த  கடலின் அழகில் அழகான வியாபாரத்தை கட்டியெழுப்பலாம் என்று கனவு அந்த கனவை நனவாக்கியவர் தான் அதானி. 


ஜவுளி தொழில் செய்த ஜெயினரான shantilal adani-யின்  3வது மகனான 1962 ஜூன் மாதம் 24ஆம் தேதி  பிறந்தார் 

கௌதம் சாந்திலால் அதானி. குடும்பமே ஜவுளித்தொழிலில் ஈடுபட்டிருந்த போதும், இவருக்கு ஏனோ அந்த தொழில் போதுமானதாக தெரியவில்லை. இதனால் தொழில் ஆர்வம் வந்த எல்லா குஜராத்திகள் போல, கௌதம் அதானியும் 1978ல் மும்பைக்கு ரயில் ஏறினார் . மும்பையில்

வைர  வியாபாரத்தில் ஈடுபடும் Mahendra Brothers நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து, வைர வியாபாரத்தின் சூத்திரங்களை 

கற்றுக்கொண்டார். வியாபார சூத்திரங்கள் கைவரப்பெற்ற பிறகு  தனியாக வைர வியாபார புரோக்கராக செயல்பட்டார். 


இப்படி தொழில் நுணுக்கங்கள் கைவரப்பெற்று அடுத்த பாய்ச்சலுக்கு தயாராக இருந்தபோது, அதானியின்  அண்ணன்

Mansukhbhai Adani அகமதாபாத்தில் ஒரு பிளாஸ்டிக் வியாபாரத்தில்  இறங்கினார்.  துணைக்கு தன் தம்பி கௌதம் அதானியை அழைத்தார்.  இந்த வியாபாரத்தில் இறங்கிய பிறகு, அதானிக்கு உலக அளவில் உள்ள  பிளாஸ்டிக் தேவை தெரியவந்தது. இதையடுத்து  பிளாஸ்டிக்  தொழிலை செய்ய ஆரம்பித்தார். 

1985 ஆம் ஆண்டில், சிறிய அளவிலான தொழில்களுக்கான முதன்மை பாலிமர்களை இறக்குமதி செய்யத் தொடங்கினார்.  இப்படி பல்வேறு தொழிலில் ஈடுபட்ட அதானி, 1988ஆம் அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து அதானி Enterprises என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் ஆரம்பத்தில் விவசாய மற்றும் மின் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலில் முதன்மையாக ஈடுபட்டது. 


அதானி நிறுவனம் ஆரம்பித்து 3வது ஆண்டில், இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கல்  என்ற  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு 

நடந்தது. இது ஓடிக்கொண்டிருந்த அதானியை ஜெட் வேகத்தில் பறக்கலாம் என்ற எண்ணத்தை விதைத்தது. 


இப்படி  பல்வேறு தொழில்களை கலந்துகட்டி செய்து வந்ததால், அதானிக்கு வர பிரசாதமாய் தாராளமயமாக்கல் தெரிந்தது.  குஜராத் அரசு முந்த்ரா துறைமுகத்தை நிர்வாக அவுட்சோர்சிங் செய்வதாக அறிவித்தது. இதற்கான ஒப்பந்தம் 1995 ஆம் ஆண்டு அதானிக்கு  கிடைத்தது. இதுவே அதானி வியாபார சரித்திரத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. 


இப்படி துறைமுகம் கட்டுமானத்தில் தொடங்கிய அதானி வியாபார சாம்ராஜ்ஜியம், இன்று  மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், போக்குவரத்து, மின் பகிர்மானம், பாதுகாப்பு, பழங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், வீட்டுக் கடன் சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை, டேட்டா சென்டர் என்று எத்தனை வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தனை துறைகளிலும்  கொடி கட்டிப் பறந்து வருகிறார். 


அதானி green energy நிறுவனம்  5,290 மெகாவாட் மின்சாரத்தை 

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 2,500 ஏக்கர்கள் பரப்பில் சூரியசக்தி பேனல்கள் அமைத்து  மின்சாரம் உற்பத்தி செய்கிறது. 


அதானியின் இந்த வளர்ச்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது  கட்ச் வளைகுடா பகுதியில் மட்டும் அதானி குழுமத்துக்கு 7,350 ஹெக்டேர் 30 வருஷக் குத்தகைக்கு அளிக்கப்பட்டது.  அப்படி  அளிக்கப்பட்ட நிலத்தை கிட்டத்தட்ட 15 மடங்கு அதிக தொகைக்கு இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதானி குழுமம் உள்குத்தகைக்கு விட்டதாக 

புகார் வந்தது. மோடி பிரதமரான பிறகு அதானியின் வளர்ச்சியும், அசுர வேகத்தில் இருப்பதால் அவரது வளர்ச்சியின் மீது பல்வேறு தரப்பினரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளனர். அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில்,  மோடி பிரதமரான பிறகு ஆஸ்திரேலியாவில்

கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி எடுக்க அதானி குழுமத்திற்கு அனுமதி கிடைத்தது.   இதற்கு  அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே இந்த projectக்கு எஸ்பிஐ வங்கி அதானிக்கு 63,96,54,50,000 ரூபாய் கடன் அளிப்பதாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பிண்ணனியில் பிரதமர் மோடியுடனான நட்பை அதானி பயன்படுத்தியதாக கூறப்பட்டது. 


இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு தொழில்களுக்கு நலிவடைந்து வரும் நிலையில், அதானியின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் Adani Total Gas நிறுவனத்தின் பங்கு விலை தோராயமாக 1,145 சதவீதமும், Adani  enterprise நிறுவனத்தின் பங்கு விலை தோராயமாக 825 சதவீதமும், Adani Transmission தோராயமாக 615 சதவீதமும், Adani green energy  பங்குகள் தோராயமாக 435சதவீதமும், மற்றும் Adani Power Limited நிறுவனம் தோராயமாக 190 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளன. இந்த வளர்ச்சியின் மூலம் ஆசியாவின் 2வது பணக்காரர் என்ற அந்தஸ்தை அதானி பெற்றிருப்பதாக புளூம்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது . இன்று உலகின் டாப் 15 பணக்காரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். 


கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட  5,20,000 கோடி ரூபாயாக  உள்ளது.  அதானி நிறுவனத்தின் மதிப்பு வரும் காலங்களில் எவ்வுளவு உயரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...


Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு