நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது உள்ளூர் தேவைகளான குடிநீர், கல்வி, மக்கள் நல்வாழ்வு, சுகாதாரம், சாலை பணிகள் போன்ற பணிகளை செய்து முடிப்பதே
இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டம் 1993-ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
லோக் சபா எம்பி, ராஜ்யசபா எம்பி, நியமன எம்பிக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தோமேயானால்,
மக்களவை உறுப்பினர்கள் என்கிற லோக்சபா எம்பிக்களை பொறுத்தவரை அவரவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இத்திட்டத்தை திட்டத்தை செயல்படுத்திக் கொள்ளலாம்.
மாநிலங்களவை உறுப்பினர்
என்கிற ராஜ்யசபா எம்பிக்களை
பொறுத்தவரை, அவரவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்திற்குள் செயல்படுத்தலாம்
நியமன எம்பிக்களை பொறுத்த அளவில் இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பணிகளைச் செயல்படுத்தலாம்.
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த நிதியை பயன்படுத்தலாம்.பேரிடர் பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர், பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பணிகளுக்காக, இத்திட்டத்தின் கீழ், ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை பரிந்துரை செய்யலாம்.பேரிடரின் விளைவு கடுமையாக இருப்பின், பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை பணிகளுக்காக பரிந்துரை செய்யலாம்.
தற்போது நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை எவ்வளவு பயன்படுத்தி உள்ளார்கள் என்று கடைசி ஐந்து நிதியாண்டுகளை பார்ப்போம். நாடு முழுவதும் 2015-2016 நிதியாண்டில் லோக் சபா எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக 2685 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீட்டு செய்துள்ளது. அதில் 2677 கோடியே 50 லட்சம் ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நிதியாண்டில் ராஜ்யசபா எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக 1225 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீட்டு செய்துள்ளது. அதில் 1075 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதே நிதியாண்டில் தமிழக எம்பிக்களை பொருத்த வரை லோக் சபா எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட 195 கோடி ரூபாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ராஜ்யசபா எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட 90 கோடி ரூபாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2016-2017 நிதியாண்டில் லோக் சபா எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக 2,702 கோடியே 50 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீட்டு செய்துள்ளது. அதில் 2640 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நிதியாண்டில் ராஜ்யசபா எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக 1252 கோடியே 50 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீட்டு செய்துள்ளது. அதில் 1082 கோடியே 50 லட்சம் ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதே நிதியாண்டில் தமிழக எம்பிக்களை பொருத்த வரை லோக் சபா எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட 195 கோடி ரூபாயும் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ராஜ்யசபா எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட 90 கோடி ரூபாயும் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2017-2018 நிதியாண்டில் லோக் சபா எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக 2697 கோடியே 50 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீட்டு செய்துள்ளது. அதில் 2440 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நிதியாண்டில் ராஜ்யசபா எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக 1257 கோடியே 50 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீட்டு செய்துள்ளது. அதில் 955 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதே நிதியாண்டில் தமிழக எம்பிக்களை பொருத்த வரை லோக் சபா எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட 195 கோடி ரூபாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ராஜ்யசபா எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட 90 கோடி ரூபாயில் 82 கோடியே 50 லட்சம் ரூபாயை பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2018-2019 நிதியாண்டில் லோக் சபா எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக 2677 கோடியே 50 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீட்டு செய்துள்ளது. அதில் 1755 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நிதியாண்டில் ராஜ்யசபா எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக 1207 கோடியே 50 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீட்டு செய்துள்ளது. அதில் 820 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதே நிதியாண்டில் தமிழக எம்பிக்களை பொருத்த வரை லோக் சபா எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட 195 கோடி ரூபாயில் 155 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ராஜ்யசபா எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட 90 கோடி ரூபாயில் 57 கோடியே 50 லட்சம் ரூபாயை பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2019-2020 நிதியாண்டில் லோக் சபா எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக 2715 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீட்டு செய்துள்ளது. அதில் 1487 கோடியே 50 லட்சம் ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நிதியாண்டில் ராஜ்யசபா எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக 1212 கோடியே 50 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீட்டு செய்துள்ளது. அதில் 325 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதே நிதியாண்டில் தமிழக எம்பிக்களை பொருத்த வரை லோக் சபா எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட 195 கோடி ரூபாயில் 97 கோடியே 50 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ராஜ்யசபா எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 கோடி ரூபாயில் 42 கோடியே 50 லட்சம் ரூபாயை பயன்படுத்தப்பட்டுள்ளது.
எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில்
2015-16 நிதியாண்டில்
லோக்சபா எம்பிக்கள் நிதியில் 7 கோடியே 50 லட்சம் ரூபாயும், ராஜ்ய சபா எம்பிக்கள் நிதியில் 150 கோடி ரூபாய் பயன்படுத்தாமல் உள்ளது. 2016-17 நிதியாண்டில்
லோக்சபா எம்பிக்கள் நிதியில்
62 கோடியே 50 லட்சம்,
ராஜ்ய சபா எம்பிக்கள் நிதியில்
170 கோடி ரூபாய் நிதியும் பயன்படுத்தாமல் உள்ளது.
2017 -18 நிதியாண்டில்
லோக்சபா எம்பிக்கள் நிதியில் 257 கோடி 50 லட்சம் ரூபாயும்,
ராஜ்ய சபா எம்பிக்கள் நிதியில் 302 கோடியே 50 லட்சம் ரூபாயும் பயன்படுத்தாமல் உள்ளது.
2018 -19 நிதியாண்டில்
லோக்சபா எம்பிக்கள் நிதியில் 922 கோடியே 50 லட்சம் ரூபாயும்,
ராஜ்ய சபா எம்பிக்கள் நிதியில் 387 கோடியே 50 லட்சம் ரூபாயும் பயன்படுத்தாமல் உள்ளது.
2019 - 20 நிதியாண்டில்
லோக்சபா எம்பிக்கள் நிதியில் 1227 கோடியே 50 லட்சம் ரூபாயும்,
ராஜ்ய சபா எம்பிக்கள் நிதியில் 887 கோடியே 50 லட்சம் ரூபாயும் பயன்படுத்தாமல் உள்ளது. ஆக மொத்தமாக கடந்த ஐந்து ஆண்டுகளில்
4 ஆயிரத்து 375 கோடி ரூபாய் நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது.
Comments
Post a Comment