வீரன் சுந்தரலிங்கம்
தென்பாண்டி சீமையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, உற்ற தளபதியாய் விளங்கியவர். ஆங்கிலேயருக்கு எதிராக தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் என்ற பெருமைக்குரியவர் வீரன் சுந்தரலிங்கம். இன்றைய தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள கவர்னகிரி கிராமத்தில் 1770ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி, கட்டக் கருப்பணனுக்கும், முத்திருளி அம்மாளுக்கும் பிறந்தவர் சுந்தரலிங்கம். இளம் வயதில் நாகனார் என்பவரிடம் சிலம்பம், மல்யுத்தம், வாள் சண்டை உள்ளிட்ட பல்வேறு போர் கலைகளை கற்றுத் தேர்ந்த சுந்தரலிங்கம், அப்பகுதியில் நடைபெறும் பல்வேறு சிலம்பம், மல்யுத்தப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டினார். சுந்தரலிங்கத்தின் புகழ், அப்பகுதியினர் இடையே பிரபலமாகி இருந்தது. இந்த சமயத்தில், கவர்னகிரியில் உள்ள கண்மாயை, பக்கத்து பாளையங்காரர்கள் மறிந்துக் கட்டுகிறார்கள் என்று, ஊர்மக்களுக்கு தகவல் வந்தது. இதைத் தடுக்க நினைத்த கவர்னகிரி கிராமத்தினர், சுந்தரலிங்கம் தலைமையில் ஒரு சிறு படையாகத் திரண்டு, அவர்களுடன் மோதி, கண்மாய் மறித்து க...