Posts

Showing posts from 2021

வீரன் சுந்தரலிங்கம்

 தென்பாண்டி சீமையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, உற்ற தளபதியாய் விளங்கியவர். ஆங்கிலேயருக்கு எதிராக தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் என்ற பெருமைக்குரியவர் வீரன் சுந்தரலிங்கம்.  இன்றைய தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள கவர்னகிரி கிராமத்தில் 1770ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி, கட்டக் கருப்பணனுக்கும், முத்திருளி அம்மாளுக்கும் பிறந்தவர் சுந்தரலிங்கம்.  இளம் வயதில் நாகனார் என்பவரிடம் சிலம்பம், மல்யுத்தம், வாள் சண்டை உள்ளிட்ட பல்வேறு போர் கலைகளை கற்றுத் தேர்ந்த சுந்தரலிங்கம், அப்பகுதியில் நடைபெறும் பல்வேறு சிலம்பம், மல்யுத்தப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டினார். சுந்தரலிங்கத்தின் புகழ், அப்பகுதியினர் இடையே பிரபலமாகி இருந்தது.  இந்த சமயத்தில், கவர்னகிரியில் உள்ள கண்மாயை, பக்கத்து பாளையங்காரர்கள் மறிந்துக் கட்டுகிறார்கள் என்று, ஊர்மக்களுக்கு தகவல் வந்தது. இதைத் தடுக்க நினைத்த கவர்னகிரி கிராமத்தினர், சுந்தரலிங்கம் தலைமையில் ஒரு சிறு படையாகத் திரண்டு, அவர்களுடன் மோதி, கண்மாய் மறித்து க...

ஆச்சார்யா வினோபா பாவே.

"காந்தியத்தை என்னைவிட சரியாகப் பின்பற்றுபவர்... எனக்கு அவர் மாணவர் அல்ல... குரு'' என காந்தியால் போற்றப்பட்டவர். ஆயுதப்புரட்சியால் தான் நிலமற்றவர்களுக்கு நிலச்சுவான்தார்களிடம் இருந்து நிலத்தை பெற்றுத் தரமுடியும் என்று கம்யூனிசவாதிகள் சொல்லிய நிலையில், அமைதியான முறையில் எந்தவித உயிரிழப்புகளும் இன்றி நிலச்சுவான்தார்களிடம் இருந்து நிலத்தை வாங்கி, பகிர்ந்து அளிக்க முடியும் என்ற செயல்படுத்திக் காட்டியவர்....  இப்படி அசாத்திய செயல்களை சாத்தியமாக்கியவர், ஆச்சார்யா வினோபா பாவே. 1895ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி மகாராஷ்டிராவின் கடலோர கொங்கண் பகுதியில் உள்ள Gagoda என்ற குக்கிராமத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் Vinayak Narahari Bhave. யோகிகள், தத்துவ ஞானிகளின்  கருத்துக்களை இளம் வயதிலேயே உள்வாங்கிய பாவேவுக்கு, வழக்கமான பள்ளி பாடங்கள் போதுமானதாக இல்லை. பல்வேறு ஆன்மீக சாதனங்களைக் கற்றார். பிரம்மச்சரியத்தை, வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பது என்று உறுதி பூண்டார். 1918 ஆம் ஆண்டில் , இடைநிலை தேர்வுக்கு பம்பாய்க்கு செல்லும் வழியில், ஒரு செய்தித்தாளை வாங்கிப் படி...

ஆட்சி கவிழ்ப்புகளின் கதை

 2017 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்த போது, பாஜகவோ அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க தீவிரம் காட்டி கொண்டிருந்தது. எல்லா மாநிலங்களிலும் எம்எல்ஏக்கள், மந்திரிகள் தான் கட்சி மாறுவார்கள். இந்த மாநிலத்தில் தான் முதலமைச்சரே கட்சி மாறிய கதை நடந்தது.  2014ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும், பாஜக 11 இடங்களிலும், அருணாச்சல பிரதேச மக்கள் கட்சி 5 இடத்திலும் சுயேச்சைகளாக 2 பேரும் வெற்றி இருந்தார்கள். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் 49.50 சதவீத வாக்குகளையும், பாஜக 30.97 சதவீத வாக்குகளையும் பெற்றது. முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நபம் துகி (Nabam Tuki) பொறுப்பேற்றார். முதல்வராக இருந்த நபம் துகிக்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கையில், ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சி சேர்ந்த எம்எல்ஏக்கள் 14 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் சில எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்படிதான் முதலில் ஆட்சியில் குழப்பம் ஏற்பட ஆரம்பித்தது. இப்படி பல்வேறு அரசியல் குழப்பங்களை தாண்டி 2016 ஜூலை மாதம் Pema Khandu என்பவரை காங்கிரஸ் கட்சி முதல...

அரசியல் என்பது சினிமா அல்ல

 தமிழக அரசியலில் சினிமாவின் தாக்கம் என்பது, சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே தொடங்கியது. 1950களில் திராவிட இயக்கங்கள், தங்கள் கருத்துக்களை சினிமா மூலமாகவும் பரப்பின. சினிமாவில் அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் வசனகர்த்தாவாக மாறி, தங்கள் எழுத்துக்கள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தினர். சினிமாத்துறையில் இருந்து இவர்கள் இருவர் மட்டும் இல்லாமல், எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா என ஐந்து முதலமைச்சர்களை தமிழகம் கண்டுள்ளது. இவர்களைத் தவிர எஸ்.எஸ் ராஜேந்திரன் தொடங்கி இன்றைய கருணாஸ் வரை, சினிமாவில் இருந்து வந்த பலர், எம்பி, எம்எல்ஏ பொறுப்புகளையும், கட்சியில் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளனர். நிறைய நடிகர்கள் தனிக்கட்சி தொடங்கினாலும், வெகு சிலரே வெற்றி வாகை சூடினார்கள். பலர் தட்டு தடுமாறி, பிறகு அரசியலே வேண்டாம் என்று ஓடி விட்டனர்.  முதலில் காங்கிரஸ் அபிமானியாக  இருந்த எம்ஜிஆர், பின்னர் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்தார். இவரை, அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி கொண்டார் அண்ணா. எம்ஜிஆர் தன்னுடைய படங்களில், திமுக கொடியை பயன்படுத்துவதிலும், கருத்துகளை பரப்புவதிலும் எப்பொழுத...

ஜன சங்கம் to பாஜக வரை

  ஜன சங்கம் to பாஜக  வரை..  2019  பொதுத்தேர்தலில் இந்தியாவில்  காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தொடர்ந்து 2வது முறை ஆட்சியை பிடிப்பது இதுவே முதல் முறை அதுவும் தனிப்பெரும்பான்மையுடன் ஹிந்துத்துவா கட்சியான பாஜக எப்படி கிறித்தவர்கள்  அதிகமுள்ள கோவாவில் ஆட்சி அமைக்க முடிகிறது, முஸ்லிம்கள் அதிகமுள்ள காஷ்மீரில் கணிசமான அளவில் வெற்றி பெற்று ஆட்சியை நிர்ணயிக்க, முடிகிறது?  1984 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பாஜக பெற்ற எம் பி களின் எண்ணிக்கை 2, ஆனால் இன்றோ 303 எம்பிகள் 14 மாநிலங்களில் ஆட்சி 10 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என்று உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கட்சியாக மாறி இருக்கிறது.  பாரதிய ஜனதாவை தெரிந்து கொள்ள வேண்டுமானால்  அதன் முந்தைய வடிவமான பாரதிய ஜன சங்கத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.  1948ல் காந்தி கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் தடைசெய்யப்பட்டது . அப்போது  தங்களுக்காக வெளியிலிருந்து எந்த அரசியல் கட்சியோ, இயக்கமோ ஆதரவு குரல்  கொடுக்கவில்லை என்பதை உணர்ந்த அன்றைய ஆர் எஸ் எஸ்ஸின் தலைவர் குருஜி கோல்வல்கர், தங்களுக்கான அமைப்பை அரசியல் த...

இந்திராவின் காதல்..!

 இந்திராவின் காதல்..!  இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி இந்த பெயர்களுக்குப் பின்னால் உள்ள காந்தி என்பது எப்படி வந்தது தெரியுமா? அதை தெரிந்துகொள்ள வேண்டுமானால், விடுதலை போராட்டத்துடன் சேர்ந்த அழகான இந்திரா, பெரோஸின் காதல் கதையையும் தெரிந்துகொள்ள வேண்டும்.  1930ஆம் ஆண்டு அலகாபாத்தில் உள்ள christian கல்லூரிக்கு வெளியே, தகதகக்கும் வெயிலில் கமலா நேரு, அவரது 13 வயது மகள் இந்திரா பிரியதர்ஷினி மற்றும் காங்கிரஸ் பெண் தொண்டர்கள் சிலருடன், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.    வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், கமலா நேரு திடீரென மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த கமலா நேருவை, கல்லூரி மாணவர் ஒருவர் தாங்கி பிடித்து, நிழல் பகுதிக்கு அழைத்துச் சென்று, ஆசுவாசப்படுத்தி அமர வைத்தார். பின்னர் ஒரு வண்டியை பிடித்து, ஆனந்த பவனுக்கு அழைத்து சென்றார்... அந்த மாணவர் தான் ஃபெரோஸ் ஜஹாங்கிர் காண்டி (Feroze Jehangir Ghandy). காந்தி இல்லை காண்டி. பார்சி சமூகத்தை சேர்ந்த பெயர். இவருடைய வம்சத்துக்கும், காந்தியின் குடும்பத்துக்கும் எந்த சம்ப...

அதானியின் ‌‌அபரிமிதமா வளர்ச்சிக

 அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே என்று 90களில் இளைஞர்கள் அரபிக் கடலின் அழகை கண்டு ரசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு இளைஞர் அந்த  கடலின் அழகில் அழகான வியாபாரத்தை கட்டியெழுப்பலாம் என்று கனவு அந்த கனவை நனவாக்கியவர் தான் அதானி.  ஜவுளி தொழில் செய்த ஜெயினரான shantilal adani-யின்  3வது மகனான 1962 ஜூன் மாதம் 24ஆம் தேதி  பிறந்தார்  கௌதம் சாந்திலால் அதானி. குடும்பமே ஜவுளித்தொழிலில் ஈடுபட்டிருந்த போதும், இவருக்கு ஏனோ அந்த தொழில் போதுமானதாக தெரியவில்லை. இதனால் தொழில் ஆர்வம் வந்த எல்லா குஜராத்திகள் போல, கௌதம் அதானியும் 1978ல் மும்பைக்கு ரயில் ஏறினார் . மும்பையில் வைர  வியாபாரத்தில் ஈடுபடும் Mahendra Brothers நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து, வைர வியாபாரத்தின் சூத்திரங்களை  கற்றுக்கொண்டார். வியாபார சூத்திரங்கள் கைவரப்பெற்ற பிறகு  தனியாக வைர வியாபார புரோக்கராக செயல்பட்டார்.  இப்படி தொழில் நுணுக்கங்கள் கைவரப்பெற்று அடுத்த பாய்ச்சலுக்கு தயாராக இருந்தபோது, அதானியின்  அண்ணன் Mansukhbhai Adani அகமதாபாத்தில் ஒரு பிளாஸ்டிக் வியாபாரத்தில்  இறங்கினா...

எல்ஐசி உருவானது ஏன்?

 2021 பிப்ரவரி 1 தேதி, நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது எல்.ஐ.சியின் பங்குகளை விற்பதாக அறிவித்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.  Life insurance corporation.  தமிழில் சொல்ல வேண்டும் என்றால் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம். இதன் சுருக்கமே LIC.  1956 செப்டம்பர் 1ம் தேதி, காப்பீட்டுத் துறையை தேசியமயமாக்கி, இந்திய ஆயுள் காப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 245க்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி உருவானது.  சுதந்திரத்திற்கு முன்பு, 1818ஆம் ஆண்டிலேயே, இந்தியாவில் முதல் காப்பீட்டு நிறுவனமாக oriental life insurance என்கிற தனியார் நிறுவனம், கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டது. படிப்படியாக, 245க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் காப்பீட்டு துறையில் செயல்பட்டு வந்தன. இத்தனை நிறுவனங்கள் இருந்தும் எல்ஐசி துவங்குவதற்கான காரணம் என்ன, என்பதை பார்ப்போம்.  சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவராக இருந்த Ramkrishna Dalmia, பாரத் இன்சூரன்ஸ் ...

முதல் ஊழல்

 படேல் மறைவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைவர், நாட்டின் பிரதமர் என்று  சர்வ வல்லமை பொருந்தியவராக மாறிவிட்டார் நேரு. ஆனால் தனது அரசின் மீது, சொந்த மருமகனே குற்றச்சாட்டுகளை அடுக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை.  1957 டிசம்பர் 16ஆம் தேதி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அன்று நேருவின் மருமகனும், Raebareli தொகுதி எம்பியுமான Feroze Gandhi பேசுவதற்கு சபாநாயகரிடம் வாய்ப்பு கேட்டு இருந்தார்.  Feroze, இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உள்ள, மாமனாருக்கு உதவும் மருமகனாக அல்ல; மாமனார் அரசின் முறைகேடுகளைக் கிழித்து எறியும் மருமகனாக இருந்தார். எப்பொழுதெல்லாம் Feroze Gandhi பேசுகிறாரோ அப்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்புவார்.  அந்த மாதிரி தற்போதும் ஏதோ புயலைக் கிளப்பப் போகிறார் என்று எதிர்க்கட்சிகளுக்கு பொறி தட்டியது. மற்றொருபுறம், நேருவின் சகாக்களுக்கோ கிலி பிடித்தது. இந்த முறை அவர் குண்டு வீசியது, நேருவின் நெருங்கிய நண்பரும், நிதியமைச்சருமான டி.டி.கிருஷ்ணமாச்சாரி மீது.  மெதுவாக எழுந்து மைக்கை பிடித்த Feroze Gandhi, "மரியாதைக்குரிய நிதியமைச்சர் ...

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

 வேகமாக செல்பவர்களை பார்த்து, "ஆமா இவரு கோட்டைக்கு போறாரு; மெதுவா போப்பா" என்று திரைப்படங்கள் முதல் கிராமங்கள் வரை வழக்குமொழி உண்டு. அப்படி, தமிழகத்தில் கோட்டை என்று சொன்னால், அது தலைமைச் செயலகம் செயல்படும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் தான் குறிக்கும்.  தமிழகத்தில், கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக சர்வ வல்லமை பொருந்திய இடம் உண்டு என்றால், அது சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை.  1600-களில் இங்கு வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினர், இந்தியாவின் பல பகுதிகளில் தங்களது வணிகத்தை விஸ்தரித்து இருந்தனர். மசூலிப்பட்டினத்தில்  தங்கள் வணிகம் சரிவர நடைபெறாததால், தெற்கு நோக்கி நகர முடிவு செய்தனர். தென்னகத்தில் தங்களுக்கு ஏற்ற இடத்தை தேடிக் கொண்டிருந்தனர்.  தங்களுக்கு வசதியாக ஒரு இடத்தை கம்பெனி அதிகாரிகள் பார்த்தனர். அந்த இடம், சந்திரகிரியில் ஆட்சிபுரிந்த விஜயநகர மன்னர், மூன்றாம் வேங்கடப்பரின் தம்பி அய்யப்பர், பூந்தமல்லியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பகுதியில் இருந்தது. அய்யப்பரின் ஆட்சிப் பகுதி புலிக்கட்டிலிருந்து, அதாவது பழவேற்காடு ஏரியில் இருந்து சாந்தோம் வரை...

வாரிசு எம்எல்ஏகள்

 ஒருவர் ஒரு முறை எம் எல் ஏ தேர்தலில் வெற்றி பெறுவதே குதிரைக் கொம்பாக இருக்கும் நிலையில், தலைமுறை தாண்டியும் தேர்தலில் கலக்கும் குடும்பங்களைப் பார்த்திருக்கிறீர்களா? நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 3ம் தலைமுறையாக எம்எல்ஏ-வானவர்கள் கூட இருக்கிறார்கள்.  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ-வாகி உள்ள உதயநிதி, 3ம் தலைமுறை எம்எல்ஏ ஆவார். இவரின் தந்தை ஸ்டாலின், நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம், 7வது முறையாக எம்எல்ஏவாகி உள்ளார்.‌ உதயநிதியின் தாத்தா கருணாநிதி, 13 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்.  திருவெறும்பூர்  தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாகி உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், 3ம் தலைமுறை எம்எல்ஏ தான். அவரது தந்தை பொய்யாமொழி, 1989 மற்றும் 1996 ஆகிய இரண்டு முறை திருச்சி - II தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தார். மகேஷ் பொய்யாமொழியின் தாத்தா அன்பில் தர்மலிங்கம், 1962 மற்றும் 1980ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், லால்குடி தொகுதியில் இருந்தும், 1971 தேர்த...

வாரிசு முதல்வர்கள்

 தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின், மே 7ஆம் தேதி பொறுப்பேற்றார். இவரே தமிழகத்தில் முதல் முறையாக, முதலமைச்சரின் மகனாக இருந்து முதலமைச்சர் ஆனவர். இவரின் தந்தை கருணாநிதி 1969 முதல் 1971, 1971 முதல் 1976, 1989 முதல் 1991, 1996 முதல் 2001, 2006 முதல் 2011 என 5 முறை தமிழக முதலமைச்சராக இருந்துள்ளார்.  இதேபோல் பல மாநிலங்களில், முதலமைச்சரின் மகன்கள், முதலமைச்சராகி உள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்.  1974 முதல் 1982 வரை  காஷ்மீர் முதலமைச்சராக இருந்தவர் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி நிறுவனர் Sheikh Mohammed Abdullah. அவர் உயிரிழந்த பிறகு, அவரின் மகன் Farooq Abdullah, 3  முறை முதலமைச்சராக இருந்துள்ளார். இவரது மகன் Omar Abdullah 2009 முதல் 2015 வரை ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக இருந்தார். இதேபோல்  ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி நிறுவனர் Mufti Mohammad Sayeed 2002 முதல் 2005 மற்றும், 2015 முதல் 2016 வரை என 2 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். Mufti Mohammad Sayeed 2016ல் உயிரிழந்ததை அடுத்து, அவரது மகள் Mehbooba Muf...

சென்னையின் அடையாளங்களில் ஒன்று..?

 சென்னையின் அடையாளங்களில் ஒன்று.....  சென்னையின் முக்கிய பகுதிகளில் எங்கு சென்றாலும், ஒரு மேம்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். அந்த அளவிற்கு சென்னையில் மேம்பாலங்கள் பெருகிவிட்டது. இப்படி சென்னையின் அடையாளமாக மாறி போகும் மேம்பாலங்களில் பழமையான மேம்பாலம் அண்ணா மேம்பாலம். இதை ஜெமினி பிரிட்ஜ் என்று சொல்வார்கள்.   ரயில்வே பாதை, ஆறுகள், கால்வாய்கள் ஆகியவற்றின் குறுக்கே பாலம், மேம்பாலம் கட்டுவதற்கு வழக்கம் இருந்தபோது, சென்னை அண்ணா சாலையில் 1973இல் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டப்பட்டது.  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம் இதுவாகும்..  80 களில் தொடங்கி  தற்போது வரை, தமிழ் சினிமாவில் சென்னையை காட்ட வேண்டும் என்றால், அண்ணா மேம்பாலத்தையே காட்டுவார்கள். இப்படி தவிர்க்க முடியாத சென்னையின் அடையாளமாக மாறி போனது அண்ணா மேம்பாலம்.  1973 ஜூலை 1ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அண்ணா மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது. அண்ணா மேம்பாலம் 1,250 அடி நீளமும், ...

உலகை ஆளும் குளிர்பானம்

உலகை ஆளும் குளிர்பானம்  உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோய் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா-க்கு மருத்து கண்டுபிடிக்க உலகின் முன்னணி மருத்து நிறுவனங்கள் முதல், உள்ளூரில் நாட்டு வைத்தியம் பார்க்கும் பாட்டி வரை மும்மரமாக இருக்கிறார்கள். இவர்களில் யார் சரியான  மருந்து கண்டுபிடிப்பார்கள் என்பது தெரியவில்லை. ஆனால்  கொரோனா தொற்று முடிவில், வேறு பல நோய்களுக்கு நம் கையில் மருந்து இருக்கும். இதில்  சில மருந்துகள் நமக்கு பிடித்துப்போய், தினமும் உட்கொள்ளும் ஒரு உணவாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  மருந்தாவது, பிடித்துப் போவதாவது...?  தலைவலிக்கு மருந்து கண்டுபிடிக்கப் போய் அதுவே ஒரு நூற்றாண்டாக உலகம் முழுவதும் சக்கை போடு போடும் குளிர்பானமாக  மாறிய கதை தெரியுமா..?  அமெரிக்காவில் 1800களில் பிற்பகுதியில் மருத்துவம் படித்தவர்கள், சில காலம் வைத்தியம் பார்த்துவிட்டு,  பிறகு வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கினார்கள். சிலருக்கு என்னவோ உள்ளூர இருந்த ஆராய்ச்சி தாகம்... சிலருக்கோ ஏதாவது ஒரு மருந்தை கண்ட...