Posts

மகாராஷ்டிராவில் பாஜக வளர்ந்த கதை

 மகாராஷ்டிராவில் பாஜக வளர்ந்த கதை சுதந்திரம் பெற்றதில் இருந்து, பெரும்பாலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த மகாராஷ்டிராவில், 1995ல் காங்கிரஸை வீழ்த்தி சிவசேனா - பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஜூனியர் பார்ட்னர் தான் பாஜக. காங்கிரஸ் மீண்டும் 1999ல் அரியணை ஏறியது. மோடி அலையின் காரணமாக 2014ல் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. இதனை தொடர்ந்து 2014 டிசம்பரில் மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தது. மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி என்பது, பாஜகவை விட, அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-க்கு முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் ஆர்எஸ்எஸ் தலைமையகம் உள்ள நாக்பூர், மகாராஷ்டிராவில் தான் உள்ளது. 2014 சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன், 25 ஆண்டுகளாமாக இருந்த சிவசேனா, பாஜக கூட்டணி உடைந்தது. அதேபோல் 15 ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டணி அரசை நடத்தி வந்த காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் உடைந்தது. 4 முனை போட்டி உருவானது. 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில், பாஜக 122 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 42...

மோடியின் KGF..!

  மோடியின் KGF..!  நாம் ஏதாவது பெரிய ரிஸ்க் எடுத்தோம் என்றால் நமக்கு ஆலோசனை சொல்லுபவர்கள்,  இது நடக்காவிட்டால், நீ ஃப்ளாட் பார்முக்கு சென்றுவிடுவாய்  என்று சொல்வார்கள் . அப்படி பிளாட்பார்மில் டீ விற்பதில்  வாழ்க்கையை ஆரம்பித்து, பார் போற்றும் அளவிற்கு உயர்ந்தவர் தான், நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்கின்ற நரேந்திர மோடி.  KGF திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஹீரோ சொல்லுவார்," யாரோ 10 பேர அடிச்சி டான் ஆனவன் இல்லடா நா.. நா அடிச்ச 10 பேருமே டான்தான்" என்ற வசனம் வரும், அதுபோல யாரோ சிலரை எதிர்க்கொண்டு  அரசியலில் மேல் வந்தவர்  அல்ல நரேந்திர மோடி... அவர்  எதிர்த்த கொண்ட ஒவ்வொருவரும் ஆகச்சிறந்த அரசியல் ஆளுமைகள் தான்.  அந்த வரிசையில் முதல் ஆளுமை யார் என்று பார்த்தால், இரும்பு மங்கை என்று அழைக்ககூடிய இந்திரா காந்தி. 1975 ஜூன் 25-ம் தேதி அவசர நிலையை அறிவித்தார். KGF படத்தில் கருடன் தன்னுடைய இடத்தில் எப்படி சர்வவல்லமை பொருந்தியவராக இருப்பரோ, அப்படி அவசரநிலையை அறிவித்தபோது, இந்திரா இந்தியாவின் கருடனாக இருந்தார் . அவசரநிலை அறிவிப்பை அடுத்து,  சோஷலிஸ்டுக...

சினிமா

 ‘வட்டியும் முதலும்’  பிலோமியா பிக்சர்ஸ் பேனரில் ஏ.சேவியர் ராஜ்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ந .வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்து விரைவில் திரைக்கு வர உள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.  இதனை இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி வெளியிட்டார். #VattiyumMudhalum # Samuthirakani

வீரன் சுந்தரலிங்கம்

 தென்பாண்டி சீமையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, உற்ற தளபதியாய் விளங்கியவர். ஆங்கிலேயருக்கு எதிராக தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் என்ற பெருமைக்குரியவர் வீரன் சுந்தரலிங்கம்.  இன்றைய தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள கவர்னகிரி கிராமத்தில் 1770ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி, கட்டக் கருப்பணனுக்கும், முத்திருளி அம்மாளுக்கும் பிறந்தவர் சுந்தரலிங்கம்.  இளம் வயதில் நாகனார் என்பவரிடம் சிலம்பம், மல்யுத்தம், வாள் சண்டை உள்ளிட்ட பல்வேறு போர் கலைகளை கற்றுத் தேர்ந்த சுந்தரலிங்கம், அப்பகுதியில் நடைபெறும் பல்வேறு சிலம்பம், மல்யுத்தப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டினார். சுந்தரலிங்கத்தின் புகழ், அப்பகுதியினர் இடையே பிரபலமாகி இருந்தது.  இந்த சமயத்தில், கவர்னகிரியில் உள்ள கண்மாயை, பக்கத்து பாளையங்காரர்கள் மறிந்துக் கட்டுகிறார்கள் என்று, ஊர்மக்களுக்கு தகவல் வந்தது. இதைத் தடுக்க நினைத்த கவர்னகிரி கிராமத்தினர், சுந்தரலிங்கம் தலைமையில் ஒரு சிறு படையாகத் திரண்டு, அவர்களுடன் மோதி, கண்மாய் மறித்து க...

ஆச்சார்யா வினோபா பாவே.

"காந்தியத்தை என்னைவிட சரியாகப் பின்பற்றுபவர்... எனக்கு அவர் மாணவர் அல்ல... குரு'' என காந்தியால் போற்றப்பட்டவர். ஆயுதப்புரட்சியால் தான் நிலமற்றவர்களுக்கு நிலச்சுவான்தார்களிடம் இருந்து நிலத்தை பெற்றுத் தரமுடியும் என்று கம்யூனிசவாதிகள் சொல்லிய நிலையில், அமைதியான முறையில் எந்தவித உயிரிழப்புகளும் இன்றி நிலச்சுவான்தார்களிடம் இருந்து நிலத்தை வாங்கி, பகிர்ந்து அளிக்க முடியும் என்ற செயல்படுத்திக் காட்டியவர்....  இப்படி அசாத்திய செயல்களை சாத்தியமாக்கியவர், ஆச்சார்யா வினோபா பாவே. 1895ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி மகாராஷ்டிராவின் கடலோர கொங்கண் பகுதியில் உள்ள Gagoda என்ற குக்கிராமத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் Vinayak Narahari Bhave. யோகிகள், தத்துவ ஞானிகளின்  கருத்துக்களை இளம் வயதிலேயே உள்வாங்கிய பாவேவுக்கு, வழக்கமான பள்ளி பாடங்கள் போதுமானதாக இல்லை. பல்வேறு ஆன்மீக சாதனங்களைக் கற்றார். பிரம்மச்சரியத்தை, வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பது என்று உறுதி பூண்டார். 1918 ஆம் ஆண்டில் , இடைநிலை தேர்வுக்கு பம்பாய்க்கு செல்லும் வழியில், ஒரு செய்தித்தாளை வாங்கிப் படி...

ஆட்சி கவிழ்ப்புகளின் கதை

 2017 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்த போது, பாஜகவோ அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க தீவிரம் காட்டி கொண்டிருந்தது. எல்லா மாநிலங்களிலும் எம்எல்ஏக்கள், மந்திரிகள் தான் கட்சி மாறுவார்கள். இந்த மாநிலத்தில் தான் முதலமைச்சரே கட்சி மாறிய கதை நடந்தது.  2014ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும், பாஜக 11 இடங்களிலும், அருணாச்சல பிரதேச மக்கள் கட்சி 5 இடத்திலும் சுயேச்சைகளாக 2 பேரும் வெற்றி இருந்தார்கள். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் 49.50 சதவீத வாக்குகளையும், பாஜக 30.97 சதவீத வாக்குகளையும் பெற்றது. முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நபம் துகி (Nabam Tuki) பொறுப்பேற்றார். முதல்வராக இருந்த நபம் துகிக்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கையில், ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சி சேர்ந்த எம்எல்ஏக்கள் 14 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் சில எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்படிதான் முதலில் ஆட்சியில் குழப்பம் ஏற்பட ஆரம்பித்தது. இப்படி பல்வேறு அரசியல் குழப்பங்களை தாண்டி 2016 ஜூலை மாதம் Pema Khandu என்பவரை காங்கிரஸ் கட்சி முதல...

அரசியல் என்பது சினிமா அல்ல

 தமிழக அரசியலில் சினிமாவின் தாக்கம் என்பது, சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே தொடங்கியது. 1950களில் திராவிட இயக்கங்கள், தங்கள் கருத்துக்களை சினிமா மூலமாகவும் பரப்பின. சினிமாவில் அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் வசனகர்த்தாவாக மாறி, தங்கள் எழுத்துக்கள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தினர். சினிமாத்துறையில் இருந்து இவர்கள் இருவர் மட்டும் இல்லாமல், எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா என ஐந்து முதலமைச்சர்களை தமிழகம் கண்டுள்ளது. இவர்களைத் தவிர எஸ்.எஸ் ராஜேந்திரன் தொடங்கி இன்றைய கருணாஸ் வரை, சினிமாவில் இருந்து வந்த பலர், எம்பி, எம்எல்ஏ பொறுப்புகளையும், கட்சியில் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளனர். நிறைய நடிகர்கள் தனிக்கட்சி தொடங்கினாலும், வெகு சிலரே வெற்றி வாகை சூடினார்கள். பலர் தட்டு தடுமாறி, பிறகு அரசியலே வேண்டாம் என்று ஓடி விட்டனர்.  முதலில் காங்கிரஸ் அபிமானியாக  இருந்த எம்ஜிஆர், பின்னர் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்தார். இவரை, அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி கொண்டார் அண்ணா. எம்ஜிஆர் தன்னுடைய படங்களில், திமுக கொடியை பயன்படுத்துவதிலும், கருத்துகளை பரப்புவதிலும் எப்பொழுத...