மோடியின் KGF..!

 

மோடியின் KGF..! 


நாம் ஏதாவது பெரிய ரிஸ்க் எடுத்தோம் என்றால் நமக்கு ஆலோசனை சொல்லுபவர்கள்,  இது நடக்காவிட்டால், நீ ஃப்ளாட் பார்முக்கு சென்றுவிடுவாய்  என்று சொல்வார்கள் . அப்படி பிளாட்பார்மில் டீ விற்பதில்  வாழ்க்கையை ஆரம்பித்து, பார் போற்றும் அளவிற்கு உயர்ந்தவர் தான், நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்கின்ற நரேந்திர மோடி. 


KGF திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஹீரோ சொல்லுவார்,"

யாரோ 10 பேர அடிச்சி டான் ஆனவன் இல்லடா நா.. நா அடிச்ச 10 பேருமே டான்தான்" என்ற வசனம் வரும், அதுபோல

யாரோ சிலரை எதிர்க்கொண்டு  அரசியலில் மேல் வந்தவர்  அல்ல நரேந்திர மோடி... அவர்  எதிர்த்த கொண்ட ஒவ்வொருவரும் ஆகச்சிறந்த அரசியல் ஆளுமைகள் தான். 


அந்த வரிசையில் முதல் ஆளுமை யார் என்று பார்த்தால், இரும்பு மங்கை என்று அழைக்ககூடிய இந்திரா காந்தி. 1975 ஜூன் 25-ம் தேதி அவசர நிலையை அறிவித்தார். KGF படத்தில் கருடன் தன்னுடைய இடத்தில் எப்படி சர்வவல்லமை பொருந்தியவராக இருப்பரோ, அப்படி அவசரநிலையை அறிவித்தபோது,

இந்திரா இந்தியாவின் கருடனாக இருந்தார் . அவசரநிலை அறிவிப்பை அடுத்து, 

சோஷலிஸ்டுகளான

ஜெய பிரகாஷ் நாராயண், 

மொரார்ஜி தேசாய்,  ஜன சங்கத்தின் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல இயக்கங்கள் தடை செய்யப்பட்டன.

அப்போது ஆர்எஸ்ஸ்-இன் பிரச்சாரக்கராக இருந்த மோடி, எமர்ஜென்சி எதிராக பல்வேறு களப்பணிகளை செய்தார். எமர்ஜென்சி காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அத்வானி  உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், ரகசியமாக சந்திக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்தார். மேலும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த தலைவர்களின் குடும்பங்களுக்கு ஓடோடி சென்று உதவினார். அவசரநிலையின் போது தடைசெய்யப்பட்ட பத்திரிகைகள், இலக்கியங்களை அச்சிட்டு குஜராத்,ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மக்கள் மத்தியில் விநியோகம் செய்தார். இந்த செயல் இந்திராவுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. மோடியை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டனர். இருப்பினும் எமர்ஜென்சி அமலில் இருந்த 19 மாத காலத்தில் போலீசாரால் மோடியை நெருங்கவே முடியவில்லை.  எமர்ஜென்சிக்கு எதிராக  திறம்பட செயலாற்றியதால் மோடி யார்? என்று தேசிய அளவில் அரசியல் செய்த  தலைவர்கள் மோடியை தேடினார்கள். 


குஜராத்தில் பாஜகவை வளர்த்ததில் முன்னோடி காரிய கார்த்த என்றால்  சங்கர்சிங் வகேலா (Shankersinh Vaghela) தான். 1984 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்று, ‌குஜராத்தில் இருந்து வெற்றி பெற்றது.  அப்போது குஜராத்தின் ஆற்றல் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக வகேலா இருந்தார். 1989ல் மக்களவைத் தேர்தலில் அகமதாபாத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். பின்னர் இந்த தொகுதியை அத்வானிக்காக விட்டுக் கொடுத்தார். இந்த காலகட்டத்தில்  

வகேலாவுடன்,  இணைந்து பாஜகவை கிராமப்புறங்களில் வளர்ப்பதில் மோடி மும்மரமாக செயலாற்றினார். குஜராத் பாஜகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த வகேலா, 1995ல் குஜராத்தில் பாஜக ஆட்சியை பிடித்தபோது முதல்வராக ஆசைப்பட்டார். அப்போது குஜராத் பாஜகவில் மும்மூர்த்திகள் என்றால் வகேலா, கேசுபாய் படேல், மோடி இந்த மூவரும் தான்‌.  மோடி  ஆதரவில் கேசுபாய் படேல் முதல்வரானார். இதனால் அதிருப்தி அடைந்த வகேலா, தனது ஆதரவாளர்கள் 47 பேர் அழைத்துக்கொண்டு கலகத்தை ஆரம்பித்தார்.  வகேலாவை சமாதானம் படுத்தும் நோக்கில், வகேலா ஆதரவாளரான சுரேஷ் மேத்தாவை பாஜக முதல்வராக்கியது.... மேலும் குஜராத்தை விட்டே மோடியை வெளியேற்றினார்கள்.. இதனையடுத்து மோடி தேசிய அரசியலுக்குள் வந்தார். இருந்தும் சில மாதங்களிலேயே வகாலே தனி கட்சி ஆரம்பித்து, பின்னர் காங்கிரசில் ஐயக்கியமானார். 

KGF-யை விட்டு வெளியேறிய ஆதிரா எப்போது KGFமீதே கண் இருப்பது போல், வெளியில் இருந்தாலும்  குஜராத் அரசியல் மீது மோடிக்கு கண் இருந்துகொண்டே இருந்தது. 


ஆர்எஸ்எஸ்,  ஜன சங்கம், பாரதிய ஜனதா என்று சங் பரிவாரை குஜராத்தில் வளர்த்து ஆட்சியில் அமர்த்தியதில் முதன்மையானவர் கேசுபாய் படேல். மோடியின் வழிகாட்டியாக இருந்த கேசுபாய் படேல் 1995ல் பாஜக, குஜராத்தில் முதன்முறையாக ஆட்சி அமைத்தபோது  முதலமைச்சரானார். முதலமைச்சர் போட்டியில் இருந்த சங்கர்சிங் வகேலா-வை ஓரங்கட்டி கேசுபாய் படேலை முதல்வராக்கியதில் மோடி பங்கு முக்கியமானது. 2001ல் குஜராத்தின் கட்ச் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குஜராத்தே நொறுங்கி போனது. இந்த இக்கட்டான நிலையில் இருந்து குஜராத்தை மீட்பதில் கேசுபாய் படேல் தோல்வியை அடைந்தார். இதனையடுத்து கேசுபாய் படேல் பதவி விலக கடும் நெருக்கடிக்கு இடையே மோடி பதவியேற்றார்.  இடிப்பாடுகளில் சிக்கி மீள முடியாது என்று இருந்த குஜராத்தை 10 வருடங்களில் பார் போற்றும் அளவிற்கு உயர்த்தினார். மோடி

புகழ் உயர உயர கேசுபாய்யின் அரசியல் வாழ்வு மறைய தொடங்கியது‌. இதை உணர்ந்த கேசுபாய் படேல்  2012 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மோடியின் ஆட்சியில் படிதார்கள் சமூகத்தினருக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி குஜராத் பரிவர்த்தன் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டார். இருப்பினும் அந்த தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக பெருமையான பெற்று ஆட்சி அமைத்தது. Kgf படத்தில்  ராகிபாய் கருடனை கொன்ற பிறகு

வானரத்திற்கு வாழ் கொடுத்ததை போல்,  2014ல் குஜராத் பரிவர்த்தன் கட்சியை பாஜகவுடன் இணைக்க சம்மதித்து கேசுபாய் படேலுக்கு அரசியல் மறுவாழ்வு கொடுத்து, புகழ்பெற்ற சோம்நாத் கோயிலின் அறக்கட்டளைகளை தலைவராகவும் தொடரட துணை நின்றார் மோடி.



பாஜகவின் நெருங்கிய கூட்டாளி என்றால் அது

நிதிஷ் குமார் தான். 1996ல் முதல்முறையாக வாய்பாய் பிரதமரான போதே ஆதரவு அளித்தவர் நிதிஷ்குமார். அப்படிப்பட்ட நிதீஷ் குமார், தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் வேட்பாளராக மோடி  இருப்பதை ஆரம்பம் முதலே  எதிர்த்து வந்தார். இதற்கு காரணமும் இருக்கச் செய்வது,  தேர்தல் அரசியலில் மோடியை விட நிதிஷ்குமார் சீனியர். இதனால் தன்னைவிட ஜூனியரான மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுப்பதில் அவருக்கு தயக்கம் இருந்தது. இந்நிலையில்

2013, ஜூலை மாதம் பாஜகவின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து, பாஜகவுடன் கூட்டணியை நிதிஷ்குமார் முறித்தார். தொடர்ந்து மோடியை கடிமையாக நிதிஷ்குமார் எதிர்த்து வந்தார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 2 இடங்களில் மட்டுமே ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. ஆனால் பாஜக கூட்டணியோ 31 இடங்களில் வெற்றி இருந்தது. இதனையடுத்து தன்னுடைய பரமவைரியான லாலு உடன் 2015 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று முதல்வரானார் நிதிஷ்குமார். இருப்பினும் லாலுவின் மகன்கள் கூட்டணிக்குள் இருந்து ஆட்சிக்கு குடைச்சல் கொடுக்கவே மீண்டும் மோடியின் பாஜகவுடன் நிதிஷ் குமார் இணைந்தார். 


ராஜீவ்காந்தி மறைவுக்கு பிறகு அரசியல் ஒதுங்கி இருந்த சோனியா காந்தி 1998ல் நேரடி அரசியலுக்கு வந்தார். அப்போது காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தது. காங்கிரஸை 2004ல் ஆட்சிக்கு கொண்டு வந்ததில் சோனியாவின் பங்கு அளப்பரியது. மீண்டும்  அரியணையை விட்டு

காங்கிரஸ் இறங்கக்கூடாது என்று நினைத்த சோனியா, காங்கிரசுக்கு வருங்காலத்தில் யாரெல்லாம் எதிராக வருவார்கள் நினைத்தாரோ? அவர்களை வீழ்த்தும் நோக்கில் யூகங்களை அமைத்தார். அப்படி அவர் கணிதத்தில் முதன்மையானவர் நரேந்திர மோடி.  2002-2007  ஆட்சியில்  வளர்ச்சியை நோக்கி குஜராத்தை மோடி கொண்டு சென்றார். இதனையடுத்து 2007ல்  நடந்த  சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மோடியே வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்பு தெரிவித்தது. அன்று மத்தியில் இருந்த காங்கிரஸ் இதனை ரசிக்கவில்லை. 2007 டிசம்பர் 1ஆம் தேதி குஜராத்தின் நவ்சாரியில் (Navsari) நடந்த காங்கிரஸ் பேரணியில் பேசிய அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி," merchants of death are ruling Gujarat" என்றார். தமிழில் சொன்னால்" குஜராத்தில்  மரண வியாபாரிகள் ஆட்சி செய்கிறார்கள்" என்று கடும் விமர்சனத்தை வைத்தார். 

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து   கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த

உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழு தலைவராக முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் நியமிக்கப்பட்டு மோடி  விசாரிக்கப்பட்டார். 

விசாரணையில் கலவரத்தில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடிக்குத் தொடர்பு இல்லை என்று அறிக்கை 

அளிக்கப்பட்டது. இதற்காக மோடியின் அரசியல் எதிரிகளால் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டேன் என்று ராகவன் தெரிவித்துள்ளார். இப்படி மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் தன்னுடைய இருப்பை வலுப்படுத்திக்கொண்டே வந்தார் மோடி. 


2014 நாடாளுமன்ற தேர்தலுக்காக தீவிரமாக நரேந்திர மோடி ஈடுபட்டு இருந்த சமயத்தில், முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா கட்சி தலைவருமான தேவகௌடா," மோடி பிரதமரானால் தீவிர அறிமுகம் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 2014 தேர்தலில் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, தனது எம்பி பதவியை தேவகவுடா ராஜினாமா செய்ய முன் வந்தபோது அதை மோடி தடுத்தார். இது குறித்து கூறிய தேவகவுடா,"  பாஜக வெற்றிக்கு பின்,  டில்லி சென்று, மோடியை சந்தித்து பேசியபோது 'முதலில் கூறியபடி, எம்பி பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்" என்று கூறினேன். அப்போது, உடனடியாக எழுந்த  மோடி, 'கவுடாஜி... நீங்கள் பிரதமராக இருந்தபோது செய்திருந்த சாதனைகளை பற்றி, உயர் அதிகாரிகளின் மூலம் தெரிந்துக்கொண்டேன். நெருக்கடியான சூழ்நிலையில் எனக்கு, உங்களை போன்றவர்களின் ஆலோசனை, வழி காட்டுதல் வேண்டும். நீங்கள், இனி, எந்த காரணத்துக்காகவும் ராஜினாமா செய்வது பற்றி பேசாதீர்கள்' என, வேண்டுகோள் விடுத்தார். அதனால் தான், நான் ராஜினாமா செய்யவில்லை" என்றார். இப்படி தன்னை கடுமையாக எதிர்த்தவர்களை அன்பால் ஆரத்தழுவி அரவணைப்பதில் வல்லவர் மோடி. 


ஜனசங்கம் தொடங்கி ஜனதா, பாரதிய ஜனதா  வரை  உருவாக்கி அதை வளர்த்து எடுத்தவர்களில் முதன்மையானவர்  அத்வானி. பாஜகவின் பிதாமகன் பீஷ்மராக போற்றப்படும் எல்.கே. அத்வானியின் ஆதரவாளராகவே மோடி இருந்து வந்தார்.

நீண்ட நாட்களாக பிரதமர் பதவியின் மீது அத்வானிக்கு  ஒரு கண் உண்டு.. அதற்கு ஏற்ப கட்சியும் அத்வானியை 2009 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. அந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து  மத்தியில் பாஜகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தவல்ல ஒருவரை சங்பரிவார் தேடியது. அப்போது குஜராத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார் மோடி என்று தேசிய அளவில் பாஜகவினர் கூற தொடங்கினர். இதனையடுத்து 

2013 ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரக்குழு  தலைவராக மோடியை அறிவித்தது பாஜக . இதில் அதிருப்தி அடைந்த அத்வானி, தான் பாஜகவில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். பின்னர் சங்பரிவார் தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் சமரசம்  செய்ததை அடுத்து, தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.  மகாபாரதத்தில் பீஷ்மருக்கு எதிராக நின்ற அர்ஜுனன் போல் அத்வானி எதிராக மோடியை காலம் நிறுத்தியது. அதையும் வென்றார் மோடி.



உலகின் பெரியண்ணன் என்ற மமதையில் உள்ள நாடு அமெரிக்கா..

2002ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா கலவரத்தை காரணம் காட்டி 2005ஆம் ஆண்டு நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசு மறுத்துவிட்டது. மோடி பிரதமராக பதவியேற்றதும் அவரை அமெரிக்கா வருமாறு அதிபர் ஒபாமா பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். உச்சகட்டமாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற மோடியின் ஆதரவு தேவை என்கிற நிலையை கால உருவாக்கியது. 2019ஆம் ஆண்டு 7 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்ற மோடி,

ஹூஸ்டன் நகரில் 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்ற howdy modi

நிகழ்ச்சியில் டிரம்ப்புடன் கலந்துகொண்டார்.இந்த மேடையில் டிரம்பை அறிமுகம் செய்து வைத்து அவருக்கு வாக்களித்து மீண்டும் அதிபராக்குமாறு இந்தியர்களிடம் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

உலகின் ceo of world என்று நினைத்த அமெரிக்காவிற்கு, 

ceo of world யார் என்பதை இந்த நிகழ்வு காட்டியது. 


இவர்கள் மட்டுமல்ல இன்னும் பல ஆளுமைகளுடன் மோதி அரசியலில் முன்னுக்கு வந்தவர், விஸ்வகுரு நரேந்திரபாய் மோடி..!






Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு