மகாராஷ்டிராவில் பாஜக வளர்ந்த கதை
மகாராஷ்டிராவில் பாஜக வளர்ந்த கதை சுதந்திரம் பெற்றதில் இருந்து, பெரும்பாலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த மகாராஷ்டிராவில், 1995ல் காங்கிரஸை வீழ்த்தி சிவசேனா - பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஜூனியர் பார்ட்னர் தான் பாஜக. காங்கிரஸ் மீண்டும் 1999ல் அரியணை ஏறியது. மோடி அலையின் காரணமாக 2014ல் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. இதனை தொடர்ந்து 2014 டிசம்பரில் மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தது. மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி என்பது, பாஜகவை விட, அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-க்கு முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் ஆர்எஸ்எஸ் தலைமையகம் உள்ள நாக்பூர், மகாராஷ்டிராவில் தான் உள்ளது. 2014 சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன், 25 ஆண்டுகளாமாக இருந்த சிவசேனா, பாஜக கூட்டணி உடைந்தது. அதேபோல் 15 ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டணி அரசை நடத்தி வந்த காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் உடைந்தது. 4 முனை போட்டி உருவானது. 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில், பாஜக 122 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 42...